என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஆர்த்தியும் குழந்தையும் நலமாக உள்ளனர்.
    • அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்.

    சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு விருந்தளித்தார்.

    அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் #Sk 23 படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகளும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டார்.

    இந்த வீடியோவில் ஆர்த்தி கர்ப்பமான வயிறுடன் காணப்பட்டார். இதனால் இன்னும் சில மாதத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க போகிறது என்ற தகவல்கள் தீ போல பரவின.

    இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    அதில், "எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு மகள் 'ஆராதனா' மற்றும் மகன் 'குகன்' உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கன்னட திரையுலகில் கொடூரமாக கொலை செய்யும் கொலை கும்பலை மையமாக வைத்து வெளியான 'தண்டுபால்யா' திரைப்படம்.
    • படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியானது, திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கன்னட திரையுலகில் கொடூரமாக கொலை செய்யும் கொலை கும்பலை மையமாக வைத்து வெளியான 'தண்டுபால்யா' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்தை மையமாக வைத்து தமிழில் இயக்குநர் வெங்கட் இயக்கியுள்ள திரைப்படம் 'தண்டுபாளையம்'. நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடிகை சோனியா அகர்வால் பெண் தாதாவாக நடித்துள்ளனர்.

    இப்படத்தை டைகர் வெங்கட், கே.டிநாயக் இணைந்து இயக்கியுள்ளனர். வெங்கட் மூவிஸ் சார்பில் தயாரித்துள்ளது. சோனியா அகர்வால், வனிதா விஜயகுமாருடன் முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரபிக் கோஷ், ரவிசங்கர், மகரந்த் தேஷ்பாண்டே, ரவிகாலே, நடித்துள்ளனர். இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ஜித்தின் ரோஷன் இசை அமைத்துள்ளார். சித்தூர், பெங்களூரு, கேஜிஎப், திருச்சி, கடப்பா, நகரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

    படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியானது, திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு "கூலி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
    • தற்பொழுது வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த அவரது இமய மலை ஆன்மீக பயணத்தில் இருக்கிறார்,

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் 171 ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது.

    அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு "கூலி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் கதை தங்க கடத்தல் சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்பொழுது வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த அவரது இமய மலை ஆன்மீக பயணத்தில் இருக்கிறார், அதை முடித்துவிட்டு கூலி திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் டீசரை சில வாரங்களுக்கு முன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம். படத்தின் வெளியீட்டு தேதி மே மாதம் முதலில் வெளியாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த தேதி மாற்றமடைந்தது. இந்த நிலையில் வடக்கன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்கவரி சினிமாஸ் படத்தின் தலைப்பை மாற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து டிஸ்கவரி சினிமாஸ் உரிமையாளர் மு.வேடியப்பன் தெரிவித்துள்ளதாவது..

    "எங்கள் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விரைவில் வெளியீடு காண இருக்கும் 'வடக்கன்' திரைப்படத்தின் பெயர், தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது 'ரயில்' என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் வெளியீட்டுத் தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும்! உங்கள் அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்." என மு.வேடியப்பன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி.
    • இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது.

    ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் விஷ்வல்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத்.

    இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகியது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்த நெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. சீரிஸ் வெளியாகி மக்களிடையே நல்லம் வரவேற்பை பெற்றது. 

    சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது. 43 நாடுகளில் ஹீரமண்டி தொடர் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

    இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹீரமண்டி சீசன் -2 வை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளார். லாஹுரில் இருந்து வெளியேறிய பெண் திரைத்துறை உலகத்திற்கு வருகிறாள். லாஹூர் பிரிவினைக்கு பிறகு பஸாரில் உள்ள பெரும்பாலான பெண்கள் மும்பை மற்றும் கொல்கத்தா திரைத்துறைக்குதான் வந்தடந்தனர், இங்கு நவாபுகளுக்கான ஆடிய பெண்கள் திரைத்துறையில் தயாரிப்பாளர்களுக்காக ஆடினார்கள் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் அதை மையமாக வைத்து ஹீரமண்டி சீசன் 2 வை இயக்கவுள்ளதாக சஞ்சய் கூறியுள்ளார். இதனால் ஹீரமண்டி தொடரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • . அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து வசூல் ரீதியாகவும் 600 கோடி ரூபாயிற்கு மேல்  வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

    இதில் ரஜினியை தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    மேலும் நடிகர் ரஜினி தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படமானது அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. இந்த தகவலை நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் படக்குழுவினர் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"
    • கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"

    ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை.

     சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பரவியது. தற்பொழுது படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் என்ற பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது.

    கிருதிக்கா உதயநிதி இதற்முன் இயக்கிய வணக்கம் சென்னை திரைப்படத்தை போல் இப்படமும் வெற்றி பெரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனனுக்கும் தனுஷுக்கும் இடையே ஆன கெமிஸ்டிரி வொர்க் அவுட் ஆனதுபோல் ஜெயம் ரவியுடனும் வொர்க் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது

    மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் மோதியதில் பெண் ஒருவர் பெண் ஒருவர் காயமடைந்ததாக புகார் எழுந்தது. மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாடியிருந்தனர். சம்பவத்தின்போது ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தினார்.

    இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் காயமடைந்த பெண் தனது மூக்கில் இருந்து ரத்தம் வருவதை காட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைததளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

    இந்நிலையில் சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ககர் போலீஸார், ரவீனா போதையில் இல்லை என்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தெரிவித்துள்ளனர்.

    பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திக்மான்சு ஜூலியா டைரக்டு செய்கிறார்.
    • பல்வங்கர் பாலு கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின், டோனி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக வந்துள்ளது. தற்போது கிரிக்கெட் வீரர் பல்வங்கர் பாலு வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இந்த படத்தில் பல்வங்கர் பாலு கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    இவர் ஏற்கனவே கால்பந்து விளையாட்டு வீரர் சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வங்கர் பாலு வாழ்க்கை கதை புத்தகத்தை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளனர். திக்மான்சு ஜூலியா டைரக்டு செய்கிறார்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பல்வங்கர் பாலு புனேயில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் தனது பயணத்தை ஆரம்பித்து பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை எத்தகைய சவால் நிறைந்ததாக இருந்தது என்பதை இந்த படத்தில் காட்ட உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
    • புதுமையான காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும்.

    தமிழில் ராஜா ராணி படத்தில் நடித்து பிரபலமனாவர் நஸ்ரியா. நய்யாண்டி, நேரம், வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

    பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியா கடைசியாக தெலுங்கில் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரானிகி என்ற படத்திலும் நடித்து இருந்தார். அதன்பிறகு அவர் நடிக்கவில்லை.

    இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். சூட்சும தரிஷிணி என்ற மலையாள படத்தில் நடிக்க தன்னை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும், இது புதுமையான காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும் என்றும் நஸ்ரியா சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.

    அடுத்து தமிழ் படங்களிலும் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.
    • சூர்யா 44 படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இதில், சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, சூர்யா 44 படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், சூர்யா 44 படக்குழு இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பரம் என வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

    அந்த வீடியோவுடன், லைட்ஸ்.. கேரமா.. ஆக்ஷன்..! என பதிவிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், சிம்பு மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

    இசைவெளியீட்டு விழாவில் சிம்பு "கமல்ஹாசன் சார் தான் என்னோட ஸ்கிரீன் குரு, அவரோட தக் லைஃப் படத்துல் வேலை செய்றது ரொம்ப அதிர்ஷடமா நான் பாக்குறேன், நான் இந்தியன் 1 ஓட மிகப் பெரிய ரசிகன், இந்திய 2, இந்தியன் 3 அப்பறம் கேம் சேஞ்சர் படம் பன்ற ஷங்கர் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப்" என்று கூறினார்.

    பின் ரசிகர்களிடம் "மக்கள் எல்லாரும் என்னைய வெயிட் குறச்சிட்டாரு , டிரான்ஸ்ஃபார்ம் ஆயிட்டாரு எல்லாம் சொல்றாங்க ஆனா அதுக்கும் மேல இது ஆன்மிகம் சார்ந்த விஷயம், நம்ம கூட இருக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் நம்மல விட்டுட்டு போயிடுவாங்க, நம்ம முடி கூட கொஞ்ச நாளுல கொட்டிடும், ஆனா எப்பொழுதும் நம்ம கூட இருக்க ஒரே விஷயம் நம்ம உடம்புதான் அத நம்ம நல்லா பாத்துகணும்" என்று கூறினார்.

    பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியதாது, 'தக் லைப்' படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, 'எஸ்.டி.ஆர்.48' படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறவர்கள்தான்.

    நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான். பின் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ரெட் கார்டெல்லாம் தரவில்லை, அது எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு சிறிய பிரச்சனை அதை நாங்கள் இப்பொழுது சரி ஆக்கிவிட்டோம்', என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×