ரஜினியின் `வேட்டையன்' - எப்போ ரிலீஸ் தெரியுமா?

நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். . அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ரஜினியின் `வேட்டையன்' - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Published on

நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து வசூல் ரீதியாகவும் 600 கோடி ரூபாயிற்கு மேல்  வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

இதில் ரஜினியை தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

மேலும் நடிகர் ரஜினி தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படமானது அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. இந்த தகவலை நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் படக்குழுவினர் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com