search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KGF 2"

    • ஒரு வீடியோவில் கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
    • தங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் புகார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த மாதம் 23-ம் தேதி தெலுங்கானாவை அடைந்தார். ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் நேற்றுடன் முடிந்தது.

    இதற்கிடையே, பாத யாத்திரையின் போது காங்கிரஸ் கட்சி கே.ஜி.எப்-2 படப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி வீடியோவாக தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது. இதுதொடர்பாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் தங்கள் அனுமதியின்றி படப் பாடலை பயன்படுத்தியதாக ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் 403, 565, 120 ஆகிய பிரிவுகளின் கீழும், 1957-ம் ஆண்டு காப்புரிமை சட்டம் 63ன் கீழும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில், காங்கிரஸ் கட்சி, பாரத் ஜோடோ யாத்திரை ஆகிய இரு டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    கேஜிஎப்-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து யஷின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தது. சமீபத்தில் வெளியான கேஜிஎப்-2 திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்கு தள்ளி புதிய வசூல் சாதனை படைத்தது. 

    புதிய தோற்றத்தில் யஷ் புகைப்படம்
    புதிய தோற்றத்தில் யஷ் புகைப்படம்

    இந்நிலையில், யஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சத்ரபதி சிவாஜி தோற்றத்தில் யஷ் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பதிவிட்டு, சத்ரபதி சிவாஜி வேடத்தில் யஷ் நடிக்க வேண்டும் என்றும் அதனை இயக்குனர் ராஜமெளலி இயக்க வேண்டும் என்றும் யஷின் மராட்டிய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான், யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப்.2 படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
    டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்ற ‘பாரஸ்ட் கம்ப்' ஹாலிவுட் படம் இந்தியில் அமீர்கான் நடிக்க லால் சிங் சட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. ஏற்கனவே யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகி உள்ள கே.ஜி.எப்.-2 படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது அதே தேதியில் அமீர்கானின் லால் சிங் சட்டா படமும் வெளியாகும் என்று தெரிவித்து உள்ளனர்.

    இதனால் கே.ஜி.எப். படக்குழுவினர் வட இந்தியாவில் தங்கள் படத்துக்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கே.ஜி.எப்.-2 படக்குழுவினரிடம் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    அமீர்கான்

    இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘லால்சிங் சட்டா படத்தை கே.ஜி.எப்.-2 வெளியாகும் நாளில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து கே.ஜி.எப்.-2 படத்தின் கதாநாயகன் யாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டேன். அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டனர். கே.ஜி.எப். அதிரடி சண்டை படம், எனது படம் காதல் கதையிலான குடும்ப படம். எனவே இரண்டையும் மக்கள் பார்ப்பார்கள். வசூல் பாதிக்காது” என்றார்.
    ×