search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "road rage"

  • நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
  • போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது

  ரோடு ரேஜ் (Road rage) என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உடபட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

  இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்து வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

   

  அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

  இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.  

  பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • டி.கியூ. மிட்ஜெட் கார்களை வேகமாக ஓட்டுவதில் ஆஷ்லியா திறமையானவர்
  • கார் மோதி கொண்டதில் ஆஷ்லியா காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்

  அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை சேர்ந்த மாநிலம் இண்டியானா. இதன் தலைநகரம் இண்டியானாபொலிஸ்.

  இந்நகரை சேர்ந்தவர் ஆஷ்லியா ஆல்பர்ட்ஸன் (24). ஆஷ்லியா கார் பந்தயத்தில் பிரபலமானவர்.

  தனது 10வது வயதிலிருந்தே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர் டி.கியூ. மிட்ஜெட் வகை கார்களை வேகமாக ஓட்டுவதில் திறமையானவர் என பெயர் பெற்றிருந்தார்.

  இவர் ஜி.எம்.சி. டெரைன் கார் ஒன்றில் சக பயணியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அக்காரை இவரது 31-வயது நண்பர் ஜேக்கப் கெல்லி சாலையின் இடதுபுறமாக ஓட்டி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அருகில் ஒரு கருப்பு நிற செவர்லே மலிபு காரை ஆஸ்டின் கூப்பர் (Austin Cooper) எனும் 22-வயது ஆண் வலதுபுறமாக வேகமாக ஓட்டி வந்தார்.

  ஒருவரையொருவர் முந்தி செல்லும் நோக்கில் இரண்டு கார்களும் அருகருகே மிக வேகமாக சென்றதால், ஒருவர் மற்றொருவருக்கு வழி விட மறுத்து முன்னேறி கொண்டிருந்தனர்.

  அப்போது மலிபு காரை ஓட்டியவர் திடீரென தனது பாதையிலிருந்து ஜி.எம்.சி. சென்ற பாதையின் குறுக்கே வந்தார். இதனை எதிர்பாராத கெல்லி, செயலிழந்தார். இதில் ஜி.எம்.சி. கார் சுழன்றது. இதன் விளைவாக இரண்டு கார்களும் மிக பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ஆஷ்லியா காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

  உடனடியாக காவல்துறைக்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்து, அவர்கள் விரைந்து வந்து அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லூயிவில் பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஷ்லியா மற்றும் கெல்லிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

  ஆனால், சிகிச்சை பலனின்றி ஆஷ்லியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். லேசான காயங்களுக்காக கெல்லிக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது. மலிபுவை ஓட்டிய ஆஸ்டினுக்கும் அவருடன் பயணித்த ஒரு 18 வயதுக்குட்பட்ட நபருக்கும் லேசான காயங்களுக்காக ஷ்னெக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். "ஆஷ்லியா உயிரிழந்தது குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இச்சம்பவம், உயிர் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆஷ்லியா நினைவாக இனியாவது சாலைகளில் வாகனம் ஓட்டும் போது ஒருவரையொருவர் முந்தி செல்லும் வெறியை ஓட்டுனர்கள் குறைத்து கொள்ள வேண்டும்," என பிரபல கார் பந்தய வீரர் டோனி ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.

  ×