என் மலர்
நீங்கள் தேடியது "ரவீனா டாண்டன்"
- விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
- படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.
மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `ககன மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .
அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜென்டில்வுமன் திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இயக்கவுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் டைட்டிலை கடந்த வாரம் வெளியிட்ட நிலையில் தற்பொழுது படத்தில் இந்தி நடிகையான ரவீனா டாண்டன் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். ரவீனா டாண்டன் கடைசியாக கே.ஜி.ஃப் பாகம் 1 மற்றும் 2 திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன்.
- ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன். தொடர்ந்து இந்தி மொழியில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே ரவீனா டாண்டன் திருமணமாகி தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறார்.
அவருக்கு ராஷா ததானி என்ற மகள் இருக்கிறார். இவரும் திரை உலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். ராஷா ததானியும் தமன்னாவும் மிக நெருங்கிய தோழிகள். அவரது வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சியிலும் தமன்னா தவறாமல் பங்கேற்று வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு ராஷா ததானி வீட்டில் நடந்த ஹோலி பண்டிகையில் தமன்னா பங்கேற்று மகிழ்ச்சியாக ஹோலியை கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் அவரது முன்னாள் காதலரான விஜய் வர்மாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
விழாவில் பங்கேற்பதற்காக தமன்னா, ரவீனா டாண்டன், இப்ராகிம் அலிகான், மனிஷ் மல்கோத்ரா, ஆமன் தேவ்கன் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க வந்த தமன்னா ஆடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுத்தது. ரூ.46 ஆயிரம் மதிப்பிலான கருப்பு நிற பாடிகான் உடையில் அவரது அழகான நடை, அங்கு குவிந்து இருந்த மொத்த கேமரா கண்களிலும் பளிச்சென மின்ன தொடங்கியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
- போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது
ரோடு ரேஜ் (Road rage) என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உடபட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்து வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது
மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் மோதியதில் பெண் ஒருவர் பெண் ஒருவர் காயமடைந்ததாக புகார் எழுந்தது. மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாடியிருந்தனர். சம்பவத்தின்போது ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தினார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் காயமடைந்த பெண் தனது மூக்கில் இருந்து ரத்தம் வருவதை காட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைததளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ககர் போலீஸார், ரவீனா போதையில் இல்லை என்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






