என் மலர்
நீங்கள் தேடியது "நஸ்ரியா"
- இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
- சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், 'சூர்யா47' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியாக நடிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன் முதலாக சூர்யாவும், நஸ்ரியாவும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- கடந்த சில மாதங்களாக உணர்வுப் பூர்வமாக சில பிரச்சனைகளையும், கஷ்டத்தையும் சந்தித்தேன்.
- யாருடைய செல்போன் அழைப்பையும், குறுஞ்செய்தியையும் நான் எடுக்கவில்லை.
நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்கா உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா. தொடர்ந்து மலையாள திரை உலகிலும் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.
பிரபல நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வரும் நஸ்ரியா, சினிமா, பொதுநிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருபவர்.

இந்நிலையில் சில மாதங்களாக நஸ்ரியா சினிமா, சமூக வலைதளங்கள் என எந்த தொடர்பில்லாமல் இருந்து வந்தார்.
இது குறித்து நஸ்ரியாபகத் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
நான் ஏன் இவ்வளவு நாள் வெளியே வரவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். சினிமா உள்பட என்னை சார்ந்த அனைவரோடும் தொடர்பில் இருப்பேன்.
ஆனால் கடந்த சில மாதங்களாக உணர்வுப் பூர்வமாகவும், தனிப்பட்ட முறையிலும் சில பிரச்சனைகளையும், கஷ்டத்தையும் சந்தித்தேன்.
என் 30-வது பிறந்தநாள், புத்தாண்டு, நான் நடித்த 'சூக்ஷூமதர்ஷினி' படத்தின் வெற்றி என எல்லாவற்றையும் நான் கொண்டாட தவறி விட்டேன்.
யாருடைய செல்போன் அழைப்பையும், குறுஞ்செய்தியையும் நான் எடுக்கவில்லை. இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவேன். அதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் பகத் பாசில், தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் நடிகை நஸ்ரியாவை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் தன் தந்தை இயக்கிய 'கையெத்தும் தூரத்து' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். பின்னர், பிரைட், பெங்களூர் டேஸ், டிரான்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தமிழில் 'வேலைக்காரன்', 'சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இவர் நடித்திருந்த ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

சொகுசு கார் வாங்கிய பகத் பாசில்
இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் பகத் பாசில் அவர்களது திருமண நாளையொட்டி கேரளாவில் முதல் சொகுசு காரான 'land rover defender 90' என்ற காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர் சூர்யா.
- இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இப்படத்தின் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி 'தீ'யுடன் தொடங்கி இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 'சூர்யா 43' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை நஸ்ரியா இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.
- இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
- புதுமையான காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும்.
தமிழில் ராஜா ராணி படத்தில் நடித்து பிரபலமனாவர் நஸ்ரியா. நய்யாண்டி, நேரம், வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியா கடைசியாக தெலுங்கில் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரானிகி என்ற படத்திலும் நடித்து இருந்தார். அதன்பிறகு அவர் நடிக்கவில்லை.
இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். சூட்சும தரிஷிணி என்ற மலையாள படத்தில் நடிக்க தன்னை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும், இது புதுமையான காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும் என்றும் நஸ்ரியா சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.
அடுத்து தமிழ் படங்களிலும் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நஸ்ரியா, நயன்தாரா, ஆர்யா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராஜா ராணி திரைப்படம் வெளியாகியது.
- இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது.
2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நஸ்ரியா, நயன்தாரா, ஆர்யா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராஜா ராணி திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் மூலம் அட்லி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார், இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது. காதலர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு மாபெரும் ரசிகர் பட்டாளமே இன்றும் இருக்கிறது.
நஸ்ரியா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தது அப்படத்தில் மட்டுமே. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர் ஆனால் அது இதுவரை நடக்கவே இல்லை.
ஆனால் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக நஸ்ரியா மற்றும் நயன்தாரா 10 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா, நஸ்ரியா மற்றும் ஃபஹத் பாசில் ஒன்றாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
அப்புகைப்படத்திற்கு 'இறுதியாக... இந்த நாளுக்காக' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவும் இப்படத்தை பகிர்ந்து யூ கய்ஸ் ஆர் தி ஸ்வீட்டஸ்ட், க்யூட்டஸ் அண்ட் பெஸ்ட் என்ற தலைப்பில் பதிவிட்டார்.

பல வருடங்களுக்கு பிறகு இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அப்புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






