என் மலர்
நீங்கள் தேடியது "ஜித்து மாதவன்"
- இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
- சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், 'சூர்யா47' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியாக நடிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன் முதலாக சூர்யாவும், நஸ்ரியாவும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
- மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனிடையே, சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதனால் சூர்யா 47 படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளார்.
- இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கருப்பு' படத்தை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கி வரும் படத்தில் நடிகர் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். இதனை நாக வம்சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது அடுத்த படத்தை முடிவு செய்துள்ளார்.
மாபெரும் வரவேற்றை பெற்ற 'ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சூர்யா நடிப்பில் 47-வது படமாக உருவாக உள்ளது. இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனமான கலைப்புலி எஸ். தாணு (V Creations) மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனம் 2D Entertainment இணைந்து மேற்கொள்கின்றன. இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிப்பதாகவும், கதாநாயகியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார்.
- சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா, கடந்த சில படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அவர் மீது இருக்கும் மரியாதை, ரசிகர் கூட்டம், அன்பு என எப்போதும் குறைந்ததே இல்லை. தற்போது அவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சூர்யா 47 படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா அடுத்ததாக ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான இறுதி பேச்சு வார்த்தையும் முடிவடைந்துள்ளது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது. தயாரிப்பை கலைப்புலி எஸ். தனு (V Creations) நிறுவனம் மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனம் 2D Entertainment இணைந்து மேற்கொள்கின்றன. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இப்போது மலையாளம்… மூன்று திசைகளிலும் தனது பயணத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கும் சூர்யா, ரசிகர்களிடையே மீண்டும் 'மாஸ் கம்பேக்' தரப்போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை! இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
- இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜித்து மாதவன் 2023 ஆம் ஆண்டு ரோமான்சம் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சௌபின் ஷாஹிர் , அர்ஜுன் அசோகன் , சஜின் கோபு போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்து இருந்தனர். 70 கோடி வசூலை அள்ளியது இத்திரைப்படம்.
இந்நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் ஆவேஷம் படத்தை இயக்கியுள்ளார் இதில் ஃபஹத் ஃபாசில், சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகவுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு மாறுப்பட்ட வேடமாக காணப்படுகிறார். படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியான நிலையில் இப்பொழுது அப்படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலின் பெயர் இல்லுமினாட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம்.
- ஆவேசம் திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
2024-ம் ஆண்டில் மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேசம் ஆகிய படங்கள் மலையாளம் மற்றும் தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை டைரக்டர் சிதம்பரமும் ஆவேசம் படத்தை டைரக்டர் ஜித்து மாதவனும் இயக்கினர்.
இதில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது. இப்படத்தின் இந்த மெர்சலான வெற்றிக்கு காரணம் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்பு தான். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
இதேபோல ஆவேசம் திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படமும் பெரும் அளவில் இளைஞர்களை கவர்ந்த படமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டைரக்டர் சிதம்பரம் மற்றும் ஜித்து மாதவன் இணைந்து புதிய மலையாள படம் ஒன்றை இயக்க உள்ளனர். ஜித்து மாதவன் கதையில் இந்த படத்தை சிதம்பரம் டைரக்ட் செய்கிறார்.
இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம், எடிட்டராக விவேக் ஹர்சன், ஒளிப்பதிவாளராக ஷைஜு காலித் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 2 வெற்றி இயக்குனரும் இணைந்து செயல்படுவதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.






