சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ஆவேஷம் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் "சூர்யா 47" திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

சென்னையில் நடந்த பூஜையில் நடிகர் சூர்யா, நடிகை நஸ்ரியா நசீம், இயக்குநர் ஜித்து மாதவன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்

இதனையடுத்து சூர்யா 47 படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com