என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fahad Fasil"

    • சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
    • கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- பகத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.

    இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

    கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.

    இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் முதல் பாடல் இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

    இப்படத்தின் டீசரை 4 மில்லியனுக்கும் அதிகமான பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாமன்னன் படத்திற்குப் பிறகு வடிவேல், பகத் பாசில் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
    • வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு- பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'.

    மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

    முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், 'மாரீசன்' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணியளவில் வெளியானது. டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஜித்து மாதவன் 2023 ஆம் ஆண்டு ரோமான்சம் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சௌபின் ஷாஹிர் , அர்ஜுன் அசோகன் , சஜின் கோபு போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்து இருந்தனர். 70 கோடி வசூலை அள்ளியது இத்திரைப்படம்.

    இந்நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் ஆவேஷம் படத்தை இயக்கியுள்ளார் இதில் ஃபஹத் ஃபாசில், சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகவுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு மாறுப்பட்ட வேடமாக காணப்படுகிறார். படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியான நிலையில் இப்பொழுது அப்படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலின் பெயர் இல்லுமினாட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×