பகத் பாசில் புதிய படத்தின் பாடல் வெளியீடு

இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பகத் பாசில் புதிய படத்தின் பாடல் வெளியீடு
Published on

ஜித்து மாதவன் 2023 ஆம் ஆண்டு ரோமான்சம் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சௌபின் ஷாஹிர் , அர்ஜுன் அசோகன் , சஜின் கோபு போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்து இருந்தனர். 70 கோடி வசூலை அள்ளியது இத்திரைப்படம்.

இந்நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் ஆவேஷம் படத்தை இயக்கியுள்ளார் இதில் ஃபஹத் ஃபாசில், சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகவுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் ரங்கா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு மாறுப்பட்ட வேடமாக காணப்படுகிறார். படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியான நிலையில் இப்பொழுது அப்படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலின் பெயர் இல்லுமினாட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com