search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil series"

    • இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
    • பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி

    ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் கண்ணோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத். இவர் இயக்கும் எல்லாப்படங்களிலும் ஒரு பிரமாண்ட நடனப் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.

    இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்து இருப்பார். இத்திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இவரே இசையமைக்கவும் செய்து இருந்தார்.

    அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

    சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜீ தமிழ் தொலைக்காட்சி மூன்று முக்கிய தமிழ் தொடர்களை ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
    • இந்த தொடர்கள் ஜூலை 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சி, கதை சார்ந்த டிவி தொடர்களை ஒளிபரப்புவதில் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இப்போது பிரதான நேரத்தில் மூன்று முக்கிய தமிழ் தொடர்களை ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் தமிழ் குடும்ப மகளிரை இதயபூர்வமாக கவரும் கதைக்களம் கொண்டவையாகும்.

    முதல் முறையாக ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையிலான அற்புதமான உறவை வெளிப்படுத்தும் குடும்ப நாடகமாக அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடர் இருக்கும். இரண்டாவது குடும்ப நாடகம் மாரி, இந்த இரண்டு தொடர்களும் ஜூலை 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.


    ஜீ தமிழ் ஊடக சந்திப்பு

    மூன்றாவது தொடரான மீனாக்ஷி பொண்ணுங்க என்ற தொடர், ஒரு அம்மா அவரது மூன்று மகளைப் பற்றியதாகும். இது விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த மூன்று தொடர்கள் ஒளிபரப்பாவது தொடர்பான அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஊடக சந்திப்பின்போது வெளியிட்டுள்ளது.

    இதில் மாரி மற்றும் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடரில் பங்கேற்ற நடிகர், நடிகையர்களும் பங்கேற்றனர். இந்தத் தொடர்களை பிரபலப்படுத்த ஜீ தொலைக்காட்சி வாங்க பார்க்கலாம் - இது நம்ம நேரம் என தலைப்பிட்டுள்ளது. இதில் நடிகை சினேகா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் சங்கீதா ஆகியோர் ஒவ்வொரு தொடரின்போதும் நேரலையில் உரையாடி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

    ×