என் மலர்
சினிமா செய்திகள்
- இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார்.
- தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும், தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். ராயன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் தாண்டி இந்தியிலும் 'ராஞ்சனா', 'ஷமிதாப்', 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இந்தியில் மீண்டும் ஆனந்த் எல்.ராயுடன், தனுஷ் இணைந்து தேரே இஷ்க் மெயின் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் ராஞ்சனா படத்தைப் போல் ஒரு காதல் காவியமாக உருவாகவுள்ளது.
ஆனந்த எல் ராய் இயக்கத்தில் தனுஷ் இப்படத்தின் மூலம் மூன்றாவது முறை இணைந்து பணியாற்றவுள்ளார்.
தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தொடங்கலாம் என்றும், முதல்கட்டமாக வாரணாசியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காதலை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
- போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது
ரோடு ரேஜ் (Road rage) என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உடபட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்து வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ்.
- சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது.
'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். 'டிக் டிக் டிக்', 'திமிரு பிடிச்சவன்', 'சங்கத்தமிழன்', 'பொன் மாணிக்கவேல்', 'பார்ட்டி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாகவும் பேசப்பட்டார்.
சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது. அதில், போலீசார் நிவேதா பெத்துராஜின் காரை சோதனையிட வேண்டும் என கேட்க, அதற்கு அவர் அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நிவேதா பெத்துராஜ் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு விட்டாரா? காரை சோதனையிட ஏன் அனுமதிக்கவில்லை? காருக்குள் அப்படி என்ன வைத்திருக்கிறார்? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்தநிலையில், அந்த வீடியோ பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது. அது 'பருவு' என்ற வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. இதனால் அத்தனையும் நடிப்பா? என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
பருவு வெப் தொடரில் பவன் சதினேனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த தொடரை சித்தார்த் நாயுடு எழுதி இயக்கியுள்ளார். இத்தொடர் வரும் ஜூன் 14 ஆம் தேதி Zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரை சிரஞ்சீவி மகளான சுஷ்மிதா கொனிடெலா கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மண்ட் சார்பில் தயாரித்துள்ளார்.
ஆணவ படுகொலையை மையமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடரின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. நிவேதா பெத்துராஜும் அவரது கணவனான பவன் சதினேனி எதிர்பாராத விதமாக ஒரு கொலையை செய்கின்றனர். கொலை செய்த நபரின் உடலை காருக்கும் மறைத்து வைத்து அதை எப்படி யாருக்கும் தெரியாமல் மறைக்க பெரும் முயற்சிகளை எடுப்பது போன்ற காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.
இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.
தமிழ் திரையுலகில் இசை ஜாம்பவானாக வலம் வரும் இளையாராஜா வாழ்க்கை சினிமா படமாக உள்ளது. இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். மேலும், இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு பிரத்யேகமாக இசையமைப்பாலர் என்றூ யாரும் இல்லை, இளையராஜா உருவாக்கிய சிம்ஃபனிகளை பயன்படுத்தி படம் உருவாகவுள்ளது.
பிறந்தநாளையொட்டி இசைஞானி இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
"பிறந்தநாள் வாழ்த்துகளை நீங்கள்தான் எனக்கு சொல்கிறீர்களே தவிர, எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. ரசிகர்களுக்காகத்தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; எனக்கு அது இல்லை. நன்றி... வணக்கம்" என்று உருக்கமாக கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர்.
- சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன?
சென்னை:
தமிழ் திரையுலகில் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, பிறந்தநாளை ஒட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இசையமைப்பாளர் இசைஞானி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர், "பிறந்த நாள் வாழ்த்துகளை நீங்கள்தான் எனக்கு சொல்கிறீர்களே தவிர, எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், பிறந்த நாளை நான் கொண்டாடவில்லை" என கூறினார்.
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு.
மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது.
இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்... பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன்.
எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க... என கூறியுள்ளார்.
- ஓமை கடவுளே...', 'லாக்கப்', 'மலேசியா டூ அம்னீசியா', 'மிரள்', 'பாயும் ஒளி நீ எனக்கு', 'லவ்' போன்ற படங்களில் நடித்தவர், வாணி போஜன்.
- 50 வயது தாண்டியும் நான் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.
ஓமை கடவுளே...', 'லாக்கப்', 'மலேசியா டூ அம்னீசியா', 'மிரள்', 'பாயும் ஒளி நீ எனக்கு', 'லவ்' போன்ற படங்களில் நடித்தவர், வாணி போஜன். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் வாணி போஜன் பேசும்போது, "என்னிடமே சிலர், 'என்னங்க... 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறீங்களே...' என்றெல்லாம் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் தயக்கப்பட்டிருந்தால், ஒரு நடிகையாக நான் இருப்பதற்கு அர்த்தமே இல்லை.
50 வயது தாண்டியும் நான் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. என்னை பொறுத்தவரை நடிகைகளுக்கு தயக்கம் தேவையில்லை. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் துணிச்சலே தேவை. அதுதான் நம்மை பேச வைக்கும்.
ஒரு படம் நடிப்பது என்பதே பலருக்கு பெரும் கனவு. அதேவேளை எடுத்த படத்தை ரிலீஸ் செய்வது என்பதும் கஷ்டம். நாங்களெல்லாம் நடிப்போம், சம்பாதிப்போம். அடுத்தடுத்த படங்கள் நோக்கி போய்க்கொண்டே இருப்போம். ஆனால் உயிரை கொடுத்து படத்தை எடுக்கும் இயக்குனர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்.
படம் நன்றாக ஓடுமா, ஓடாதா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நடிக்கும் ஒவ்வொரு படத்தை விரும்பி, ரசித்து நடிக்கிறேன்'' என்று கூறினார்.
வாணி போஜன் தற்பொழுது விதார்த்துடன் இணைந்து எஸ்.பி சுப்புராமன் இயக்கத்தில் அஞ்சாமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். நீட் கொடுமையையும் அதனால் மாணவர்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசக்கூடிய படமாக இது உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் இளையராஜா.
- இன்று இளையராஜா அவரது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் இளையராஜா. தமிழ் சினிமாவின் சொத்தான இளையராஜா, பல பொக்கிஷமான பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் 4500 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் ஜூன் 3 1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்தார். இன்று இளையராஜா அவரது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது" பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் தான் கூறுகிறீர்கள், ஆனால் நான் என் மகளை பறிக்கொடுத்ததால் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை, இதெல்லாம் உங்களுக்குகாகதான் தவிர எனக்கு இல்லை" என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசனின் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும்.
- ஜூலை 12-ந்தேதி படம் திரைக்குக்கு வர இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். லஞ்சத்தை எதிர்த்து போராடும் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசனின் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் வகையில் அமைந்ததுடன் படம் பெரிய வெற்றியை பெற்றது.
28 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2-ம் பாகம் ஷங்கர் இயக்கத்தில் தற்போது தயாராகி வருகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ஜூலை 12-ந்தேதி படம் திைரக்குக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவில் கமல்ஹாசன், ரகுல் பிரத் சிங், காஜல் அகர்வால், தம்பி ராமையா, இயக்குனர்கள் சங்கர், நெல்சன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பாபிசிம்கா உள்பட பலர் பங்கேற்றனர்.
நான் தமிழன், நான் இந்தியன் என்பது எனது அடையாளம். இங்கு பிரிச்சு விளையாடனும்னு யாராவது நினைச்சா அது இந்தியாவில் நடக்காது. நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போதும் அமைதி காக்க வேண்டும் என்று தெரியும். எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும். தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதே என் எண்ணம்.
பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் என்ன எதிர்பார்த்து வரவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். எக்கச் சக்க சோதனைகளை கடந்து இங்கு வந்து நிக்குறதுல எனக்கு சந்தோசம். இந்தியன் ஒரு பெரிய கதை. படம் மொத்தம் 3 பாகங்கள். இதே போன்று ஒரு படத்தை நான் சிவாஜியை வைத்து இயக்க நினைத்தேன். அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா-மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்க சொன்னார்.
அவள் ஒரு தொடர் கதை படத்தில் என் சம்பளம் ரூ.2 ஆயிரம். படத்தின் பட்ஜெட் 4 லட்சம் ான் இப்போது தனி நபர் வருமானம் ஏறிவிட்டது. விலைவாசியும் உயர்ந்து விட்டது.
இசை வெளியீட்டு விழாவிற்கு ஆன செலவு நான் நடித்த பல படங்களின் பட்ஜெட்டை காட்டிலும் அதிகம். மகள் ஸ்ருதி மனசு வச்சிருந்தா நான் இப்போது தாத்தாதான்.
பிரமாண்டத்துக்கு உதாரணமே ஷங்கர் தான். உதயநிதி ஸ்டாலின் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
- 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், நடிகர் சிம்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.

'இந்தியன் 2' படத்தில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் படத்தின் பாடலான கம் பேக் இந்தியன் என்ற பாடலை அனிருத் லைவாக பாடினார்.
அனிருத் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை பாராட்டி பேசினார் " ஷங்கர் சார் ஸ்டைல சொல்லனும்னா சிக்ஸ்க்கு அப்பறம் செவென் டா.... ரஹ்மான் சார்க்கு அப்பறம் எவன் டா" என்று கூறினார்.
சிம்பு விழாவில் " சிம்பு லேட்டா வந்துடாரு அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க, ஆனா நான் மணி சாரோட தக் லைஃப் படத்தோட ஷூட்டிங்ல இருந்துதான் வரேன்" என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
- இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா 44 படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோரும் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாழ்த்து தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
- சமூக வலைதளத்தில் பதிவிட முடிவு செய்தேன்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் தொலைகாட்சி பிரபலம் ரிதிமா பண்டிட் இடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. திருமணம் குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று ரிதிமா பண்டிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இது சிலரது கற்பனை, என்றே நினைக்கிறேன். சிலர் கதைகளை உருவாக்குகின்றனர், அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு சுப்மன் கில் பற்றி எதுவும் தெரியாது."

"இது மிகவும் அபத்தமானது. காலை முதலே எனக்கு வாழ்த்து குறுந்தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றுக்கு மறுப்பு தெரிவித்து எனக்கு சலித்துவிட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட முடிவு செய்துவிட்டேன்," என்று தெரிவித்தார்.
இது குறித்த பதிவில், "இன்று காலை முதலே எனக்கு நிறைய செய்தியாளர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர், இப்படி ஒரு விஷயம் நடைபெறவே இல்லை. பலருக்கு என் திருமணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றார்கள், ஆனால் யாருடன்? இல்லை இப்படி எதுவும் நடைபெறவில்லை. இப்போதைக்கு எதுவும் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
- முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.
நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படம் குறித்த இதர அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






