என் மலர்
சினிமா செய்திகள்
- கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி, சசிக்குமார் இணைந்து நடித்துள்ள `கருடன்' திரைப்படம் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் பார்க்க வந்த 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தட மறுத்ததாகவும், திரையரங்கத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததால் இதுகுறித்து காவலர்களின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின்.
- நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். கவின் விஜய் டி.வியில் புகழ் பெற்ற கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி யில் மட்டும் வெளியான லிஃப்ட் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இளன் இயக்கத்தில் கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பல சுவாரசியமான திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் கவின். அடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட்டான விஷ்னு எடவன் இயக்கும் முதல் படத்தில் கவின் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கவுள்ளது.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.
- இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தை ஒபேலி N கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் இன்று வரையிலும் பலரின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது. நடிகர் சூர்யா இந்த படத்தில் சாக்லேட் பாய் கணவராகவும் ரக்கெட் பாய் லவ்வராகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். படத்தின் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆனது.
அதைத்தொடர்ந்து ஒபேலி N கிருஷ்ணா, சிம்பு நடிப்பில் 10 தல திரைப்படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அடுத்ததாக ஒபேலி N கிருஷ்ணா, புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் கதைக்களம் என்ன? என்னென்ன நடிகர்கள் நடிக்கபோகிறார்கள் குறித்த தகவல் எதையும் வெளியிடவில்லை.
ஆனால் இப்படம் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து இதில் நடிகர் கவினை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன
- லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு இன்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 'இந்தியன் 2' படத்தில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதில் பாரா, நீலோற்பம் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 'இந்தியன் 2' இசை வெளியீட்டு விழா தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே மதியம் 3 மணியளவில் 6 பாடல்களை உள்ளடக்கிய ஆல்பம் வெளியாகும் என்று லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதனால் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ரசிகர்கள் பாடல்களுக்கு வைப் செய்யத் தொடங்கிவிடுவர் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
- வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக அருண்விஜய் படத்தில் இணைந்து நடிக்க தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். நடிகர் அருண் விஜய் கடைசியாக மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதைத்தொடர்ந்து இவர் தற்பொழுது ரெட்ட தல எனும் படத்திலும் நடித்து வருகிறார். வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.
தீவிரமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிரைலர் விரைவில் வெளீயிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது.
- அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான்.
நெல்லை:
தூத்துக்குடியில் சினிமா படப்பிடிப்பிற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் கூறியதாவது:-
தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது. இது அவர்களது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால் எல்லாம் மாறும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நுணுக்க மாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டி உள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும்.
தற்போது படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது. அனைவர் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. இருந்தபோதிலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான். அது என்றும் மாறாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அரசியலுக்கு அனைவரும் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
- ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பார்ட்னர், மை நேம் இஸ் ஷ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன் ஹன்சிகா நடிப்பில் வெளியான கார்டியன் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அதை தொடர்ந்து ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை முத்து கணேஷ் மேற்கொள்கிறார். படத்தின் மேகிங் வீடியோவை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். ஹாரர் கதைக்களத்தில் அமைந்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபகாலமாக விஜய் ஆண்டனி காலில் செருப்பு அணிவது இல்லை.
- செருப்பு அணியாதபோது மனதுக்கு அமைதி கிடைத்தது.
இசையமைப்பாளராக இருந்து கதாநாயனாக உயர்ந்த விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் 2' படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.
சமீபகாலமாக விஜய் ஆண்டனி காலில் செருப்பு அணிவது இல்லை. சென்னையில் நடந்த விழாக்களில் செருப்பு அணியாமலேயே பங்கேற்றார். தற்போது ஐதாராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியொன்றிலும் செருப்பு அணியாமலேயே கலந்து கொண்டார்.
இதுகுறித்து விஜய் ஆண்டனியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து விஜய் ஆண்டனி கூறும்போது, "நான் சில நாட்களுக்கு முன் செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அந்த அனுபவம் எனக்கு நன்றாக இருந்தது போல் தோன்றியது.
செருப்பு அணியாதபோது மனதுக்கு அமைதி கிடைத்தது. ஆரோக்கியத்துக்கும் அது நல்லதுதான். அது மட்டுமின்றி நமக்குள் தன்னம்பிக்கையை கூட இது வளர்க்கும். நான் எப்போது செருப்பில்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அந்த சமயத்தில் இருந்து எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் ஆன்மீக பயணமாக இமைய மலைக்கு செல்வது வழக்கம்.
- தற்பொழுது அவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் ஆன்மீக பயணமாக இமைய மலைக்கு செல்வது வழக்கம்.
தற்பொழுது அவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அடுத்து ரஜினிகாந்த் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
கூலி படத்திற்கு முன் ஆன்மீக பயணத்தை மே 30 தொடங்கினார் ரஜினிகாந்த். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசும்போது " நான் கேதார்நாத், பத்ரிநாத், பாபா குகை வருடா வருடம் செல்வது வழக்கம், ஒவ்வொரு முறை நான் அங்கு செல்லும் போது எனக்கு அது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது என்று கூறினார். அதைத்தொடர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி வெற்றி பெறுவாரா என்ற கேட்ட கேள்விக்கு நோ கமண்ட்ஸ், அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று அதை மறுத்துவிட்டார்.
நேற்று ரஜினிகாந்த கேதார்னாத் மற்றும் பத்ரினாத் கோவில்களில் வழிப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திருப்பாச்சிக்கு முதலில் ஒரு தலைப்பு வைத்தோம்.
- பாடல் வரிகளை மட்டும் கொடுக்கவில்லை தலைப்புகளையும் கொடுத்து வருகிறார்.
ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காட்டமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் "வேட்டைக்காரி." புதுமுக நடிகர் ராகுல் நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சனா சிங் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "சில தினங்களுக்கு முன்பு ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டேன், அப்போது அந்த பட இயக்குநர் படத்திற்கு தலைப்பு வைத்தவர் வைரமுத்து என்றார், இந்த படத்தின் இயக்குநர் காளிமுத்துவும் இந்த படத்திற்கு வைரமுத்து சார் தான் தலைப்பு வைத்ததாக சொன்னார். எனவே வைரமுத்து சார் பாடல் வரிகளை மட்டும் கொடுக்கவில்லை தலைப்புகளையும் கொடுத்து வருகிறார்."

"அவர் தமிழ்ப் பட தலைப்புகள் மீது கடும்கோபம் கொண்டிருக்கிறார். அதனால் தான் இப்போது அவரே களத்தில் இறங்கி தலைப்பு வைக்க தொடங்கி விட்டார். இந்த நேரத்தில் நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டும், திருப்பாச்சி என்ற தலைப்பும் வைரமுத்து சார் தான் கொடுத்தார்."
"திருப்பாச்சிக்கு முதலில் ஒரு தலைப்பு வைத்தோம், அதை விஜய் சார், செளத்ரி சார் ஏற்றுக்கொண்டார்கள். பதிவு செய்யும் போது அந்த தலைப்பு வேறு ஒருவரிடம் இருந்தது, நாங்கள் எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. புதிய தலைப்பு என்ன வைப்பது என்று தெரியாமல் எங்கள் குழுவே குழப்பமடைந்த நிலையில், தொலைக்காட்சியில் ஒரு பாடல் பார்த்தேன், "திருப்பாச்சி அருவாள தூக்கிக்கிட்டு வாடா...வாடா." என்ற பாடல் அது. அந்த பாடலை கேட்டதும், என் பட நாயகன் அருவா செய்பவர், என்றவுடன் திருப்பாச்சி என்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது, உடனே அந்த தலைப்பை வைத்துவிட்டேன். ஆகையால், எனக்கும் தலைப்பு கொடுத்தவர் வைரமுத்து சார் தான்," என்று தெரிவித்தார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.
இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் டீசரில் இடம் பெற்றது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது அட்லி இயக்கத்தில் உருவாகும் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தின் வருன் குமாருக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
- எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம் சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. படம் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அதனால் ஏற்படும் தற்கொலைகள் பற்றியும், இதனால் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கிறது, அரசு மாணவர்களின் நிலமை மற்றும் எப்படி கல்வி வியாபாரமாக ஆகியுள்ளது போன்ற சமூக பிரச்சனையை பேசக் கூடிய காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.
படத்தின் அறிவிப்பு தேதி தற்பொழுது வெளியாகியுள்ளது. படம் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






