என் மலர்
சினிமா செய்திகள்
- தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நயன்தாரா.
- நயன்தாரா கடந்த ஆண்டு சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா கடந்த ஆண்டு சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகி வெற்றி பெற்றதுடன் ரூ.1200 கோடி வசூலிலும் சாதனை படைத்தது.
தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் சொந்த ஊரான கொச்சி மற்றும் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஹாங்காங் நாட்டுக்கு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்.
ஹாங்காங் கடற்கரையில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஜாலியாக வலம் வந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் நயன்தாரா.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'.
- இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.
இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'. இதில் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஏ. எல். ரமேஷ் மேற்கொண்டிருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், '' பித்தல மாத்தி என்றால் கேடித்தனம்.. தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை. கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.
ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனம் இதற்கு முன் நான்கு படங்களை தயாரித்து இருக்கிறது. இவர்களின் இணை தயாரிப்பில் ஜோரா கைய தட்டுங்க என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பித்தல மாத்தி திரைப்படம் வெளியான பிறகு ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் ஜி. சரவணன் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அர்ஜூன் கபூர் மேரி பட்னி கா படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.
- இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது.
பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் மற்றும் நடிகை மலைகா அரோரா காதிலத்து வந்தனர். இருவரும் ஜோடியாக வலம்வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாவது வாடிக்கையான ஒன்று தான். இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், அர்ஜூன் கபூர் மற்றும் மலைகா அரோரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவரும் பிரிவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
அர்ஜூன் கபூர் தற்போது மேரி பட்னி கா படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அர்ஜூன் கபூருடன் ரகுல் பிரீத் சிங் மற்றும் பூமி பெட்னேகர் நடிக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இரண்டு பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
- அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் "இந்தியன் 2." ஜூலை மாதம் ரிலீசாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூன் 1) நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்று இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தியன் 2 ஆல்பத்தில் ஆறு பாடல்கள் நாளை முதல் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- "தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும்"
- "ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது"
சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் நடித்த ஹாரர் படமான 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகி கமர்ஷியலாக நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி வரை வசூலித்துள்ளது.
இந்த படத்தை சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பு -வின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்தது. அரண்மனை 4 திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று (மே 31) தியேட்டர்களில் ரிலீசானது. இந்நிலையில் ரிலீஸ் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த குஷ்பு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஹிந்தியில் வெளியான,பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முக்கிய கதைகளமாகக் கொண்ட 'டார்லிங்ஸ்', 'பதாய் ஹோ', 'கிரியூவ்' போன்ற படங்களை தமிழில் தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும் என்று தெரிவித்த அவர், பெண்களை பிரதானமாக கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தாண்டி கமர்ஷியலான படங்களையும் தயாரிக்க விரும்புவதாக கூறினார்.
ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது. படத்திற்கு கதையே கதாநாயகன் என்ற நிலைக்கு நாம் உயர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
ஆலியா பட் நடிப்பில் ஹிந்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்ஸ்' திரைப்படம் பெண்கள் மீது நிகழும் குடும்ப வன்முறையைப் பற்றி பேசியிருந்தது. ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பதாய் ஹோ', கதாநாயகனின் தாய் கருவுற்றதால் அந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்களை பேசிய வித்தியாசமான படமாக அமைந்தது. பதாய் ஹோ படம் தமிழில் ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.

மேலும் கரீனா கபூர், தபு, கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிரியூவ் (Crew) திரைப்படம் விமானப் பணிப்பெண்களின் இன்னல்களை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தியானத்தை நினைவூட்டும் வகையில் இருக்கும்.
- தியான காட்சியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சி.எஸ். அமுதன். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்ப் படம், தமிழ்ப் படம் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ரத்தம் என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது.
இவர் இயக்கிய தமிழ்ப் படம் படத்தின் கதை, தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்களை கிண்டல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், தமிழ்ப் படம் 2 ஆம் பாகத்தில் இடம்பெற்ற காட்சியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மேற்கொண்ட தியானத்தை நினைவூட்டும் வகையில் இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ள நிலையில், அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி தியானம் செய்ய தமிழகம் வந்துள்ள சூழலில், இயக்குநர் சி.எஸ். அமுதன் தனது எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படம் 2-வில் இடம்பெற்ற தியான காட்சியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், நடிகர் மிர்ச்சி சிவா சமாதி ஒன்றில் அமர்ந்து தியானம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து தியானத்தை முடித்துக் கொள்ளும் சிவா, பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு கிண்டலாக பதில் அளிப்பார்.
இவரது பதிவிற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்களில் பலர், இவருக்கு நக்கல் இருப்பதாகவும், சரியான நேரத்தில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் தமிழ் படம் 3 ஆம் பாகத்திற்கான குறியீடா? என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
- நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம்.
தெலுங்கு திரையுலகில் உருவாகும் புதிய படம், "கேங்ஸ் ஆஃப் கோதாவரி." இயக்குநர் கிருஷ்ண சைதன்யா இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஷ்வாக் சென் மற்றும் அஞ்சலி ஜோடி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜூ ரமணா, ஆயிஷா கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் இன்று (மே 31) வெளியானது. இதையொட்டி, இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவுடன், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளி நிற்க கூறும் போது, அவரை தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது. வீடியோவின் படி பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிடுவதும், அதனை அவர் சகஜமாக எடுத்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனினும், வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான பதிவில், "கேங்ஸ் ஆஃப் கோதாவரி பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியை தனது வருகையால் சிறப்பாக மாற்றிய பாலாகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."
"எனக்கும் பாலாகிருஷ்ணா அவர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் மற்றும் இருவருக்கும் இருவர்மீதும் நல்ல மரியாதை உள்ளது. நீண்ட காலமாக எங்களிடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது. அவருடன் மீண்டும் மேடையை பகிர்வது அருமையாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
- பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என்று தெரியவந்துள்ளது.
முதற்கட்டமாக அந்தமானில் துவங்கும் படப்பிடிப்பில் சூர்யா 44 படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதற்காக அங்கு பிரமாண்ட செட் போடப்படுகிறது.
Preparing for the ACTION at Port Blair, Andaman?️ for #Suriya44 ? #LoveLaughterWar ❤️? #AKarthikSubbarajPadam begins this June!?️@Suriya_Offl @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art @JaikaStunts @PraveenRaja_Off @2D_ENTPVTLTD… pic.twitter.com/zEs42lwjdG
— karthik subbaraj (@karthiksubbaraj) May 30, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திருமணம் குறித்து பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தது.
- தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி.
நகைச்சுவை நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரர் ஆவார்.
இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி. தமிழ் திரையுலகில் புகழ்பெற்றவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜியின் திருமணம் குறித்த அறிவிப்பு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தனி முருகன் கோவிலில் பிரேம்ஜியின் திருமணம் நடைபெற இருப்பதாக கூறும் அழைப்பிதழ் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் அழைப்பிதழ் படம்
அந்த அழைப்பிதழில் பிரேம்ஜிக்கு இந்து என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.
- பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில், இவ்வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.
சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். இந்த புஜ்ஜி கதாப்பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில், இவ்வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.
கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆயிரக்கணக்கில் கூடி இவ்வாகனத்தை பார்வையிட்ட மக்கள், பட டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கல்கி 2898 AD' படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 18 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கருடன் மீண்டும் இணைந்து இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான 'நீலோற்பம்' நேற்று வெளியாகியுள்ளது.
தற்பொழுது படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழா மாபெரும் பிரமாண்டத்துடன் நடைப்பெறவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கருடன்
- சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கருடன், இப்படம் நாளை {மே30} வெளியாகவுள்ளது.
சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெற்றி மாறன் கதை எழுதியுள்ளார். படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் மேகிங் வீடியோவை தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் படப்பிடிப்பு பணிகள், சூரி-யின் ஆக்ஷன் பயிற்சிகள், சண்டை காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என ஒரு முன்னோட்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விடுதலை திரைப்படம் போல் சூரிக்கு அடுத்த வெற்றி தரும் திரைப்படமாக கருடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






