மறைமுகமாக மோடியை கலாய்த்த "தமிழ்ப் படம்" இயக்குநர் - வீடியோ வைரல்

தியானத்தை நினைவூட்டும் வகையில் இருக்கும்.தியான காட்சியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மறைமுகமாக மோடியை கலாய்த்த "தமிழ்ப் படம்" இயக்குநர் - வீடியோ வைரல்
Published on

தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சி.எஸ். அமுதன். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்ப் படம், தமிழ்ப் படம் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ரத்தம் என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது.

இவர் இயக்கிய தமிழ்ப் படம் படத்தின் கதை, தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்களை கிண்டல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், தமிழ்ப் படம் 2 ஆம் பாகத்தில் இடம்பெற்ற காட்சியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மேற்கொண்ட தியானத்தை நினைவூட்டும் வகையில் இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ள நிலையில், அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி தியானம் செய்ய தமிழகம் வந்துள்ள சூழலில், இயக்குநர் சி.எஸ். அமுதன் தனது எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படம் 2-வில் இடம்பெற்ற தியான காட்சியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், நடிகர் மிர்ச்சி சிவா சமாதி ஒன்றில் அமர்ந்து தியானம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து தியானத்தை முடித்துக் கொள்ளும் சிவா, பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு கிண்டலாக பதில் அளிப்பார்.

இவரது பதிவிற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்களில் பலர், இவருக்கு நக்கல் இருப்பதாகவும், சரியான நேரத்தில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் தமிழ் படம் 3 ஆம் பாகத்திற்கான குறியீடா? என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com