என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tabu"

    • நாகார்ஜுனாவும், தபுவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
    • படத்தின் காட்சிகளில் இருவரது கெமிஸ்ட்ரி பல்வேறு வதந்திகளை கிளப்பியது.

    தென்னிந்திய திரை உலகில் காதல் மன்னனாக வலம் வந்தவர் நாகார்ஜுனா. திரை உலகில் இவருக்கென தனி ரசிகைகள் கூட்டம் இருந்தது.

    நாகார்ஜூனா தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ரஜினி நடித்த கூலி படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    இந்நிலையில் நாகார்ஜுனா மீண்டும் கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். நாகார்ஜூனா நடிக்கும் 100-வது படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை தபு நடிக்கிறார்.

    நாகார்ஜுனாவும், தபுவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். படத்தின் காட்சிகளில் இருவரது கெமிஸ்ட்ரி பல்வேறு வதந்திகளை கிளப்பியது.

    இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனாவும் தபுவும் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அஜித் குமார் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியானது `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம்.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் உலகளவில் 242 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2000 ஆம் ஆண்டில் அஜித் குமார் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியானது `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படம். இப்படத்தில் ஐஷ்வர்யா ராய், தபு, மமூட்டி மற்றும் அபாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடலகளும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்று வரை அப்படத்தின் பாடல்கள் ரீல்ஸ்-இல் வலம்வருகிறது.

    திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இத்திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' படத்தை மீண்டும் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தானு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத்.
    • இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

    இவர் இயக்கிய இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

     

     

    இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

     

    விஜய் சேதுபதி நடித்து அவரது 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதை தொடர்து அடுத்ததாக பூரி ஜெகநாத் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் நடிகை தபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பூரி ஜெகநாத் இணையத்தில் பதிவுட்டுள்ளார். தபு நடித்து வெளியான க்ரூ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ்.
    • தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார்.

    கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ். இவர்கள் மூவரும் கோஹினூர் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிப்புரிகிறார்கள். மூன்று கதாநாயகிகளுக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பண நெருக்கடி வருகிறது.

    வாழ்கையில் அடுத்து பணத்துக்காக என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவர்கள் வேலை செய்யும் விமானத்தில் தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்க கட்டிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

    தங்க கட்டிகளை மூவரும் சேர்ந்து கடத்தினார்களா? இல்லையா? அதில் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பதே கதை. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கதைக்களம் மிகவும் வித்தியாசமாக தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஏ கிருஷ்ணன். இவர் இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த 'லூட் கேஸ்' படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பாலாஜி டெலி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • "தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும்"
    • "ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது"

    சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் நடித்த ஹாரர் படமான 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகி கமர்ஷியலாக நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி வரை வசூலித்துள்ளது.

    இந்த படத்தை சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பு -வின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்தது. அரண்மனை 4 திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று (மே 31) தியேட்டர்களில் ரிலீசானது. இந்நிலையில் ரிலீஸ் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த குஷ்பு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

     

    அப்போது அவர் பேசுகையில், ஹிந்தியில் வெளியான,பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முக்கிய கதைகளமாகக் கொண்ட 'டார்லிங்ஸ்', 'பதாய் ஹோ', 'கிரியூவ்' போன்ற படங்களை தமிழில் தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால்  அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும் என்று தெரிவித்த அவர், பெண்களை பிரதானமாக கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தாண்டி கமர்ஷியலான படங்களையும் தயாரிக்க விரும்புவதாக கூறினார்.

    ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது. படத்திற்கு கதையே கதாநாயகன் என்ற நிலைக்கு நாம் உயர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    ஆலியா பட் நடிப்பில் ஹிந்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்ஸ்' திரைப்படம் பெண்கள் மீது நிகழும் குடும்ப வன்முறையைப் பற்றி பேசியிருந்தது. ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பதாய் ஹோ', கதாநாயகனின் தாய் கருவுற்றதால் அந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்களை பேசிய வித்தியாசமான படமாக அமைந்தது. பதாய் ஹோ படம் தமிழில் ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.

     

    மேலும் கரீனா கபூர், தபு, கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிரியூவ் (Crew) திரைப்படம் விமானப் பணிப்பெண்களின் இன்னல்களை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தபு.
    • இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

    முன்னணி நடிகையான தபு தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, இருவர், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வந்த இவர் இந்தி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.


    தபு

    இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகை தபு குழந்தை பெறுவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், "அனைத்து பெண்களைப் போல எனக்கும் தாயாக வேண்டும் என்று ஆசை உள்ளது.

    திருமணத்திற்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பதற்காக கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

    தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு பிரபல இந்தி நடிகர் தான் காரணம் என்று நடிகை தபு தெரிவித்து உள்ளார்.
    தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, இருவர், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தபுவுக்கு 51 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தபுவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் அந்த காதல் முறிந்து விட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரணம் என்று தபு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ‘‘எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அஜய் தேவ்கனை தெரியும். எனது சகோதரனுக்கு அவர் நெருங்கிய நண்பர். நாங்கள் மும்பை ஜுஹூ பகுதியில் வசித்தோம். அப்போது எனது ஒவ்வொரு செயலையும் அஜய் தேவ்கன் கவனித்துக்கொண்டே இருப்பார். 

    தபு, அஜய் தேவ்கன்
    தபு, அஜய் தேவ்கன்

    நான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வருவார். வேறு பையனுடன் நான் பேசுவது அவருக்கு பிடிக்காது. அந்த பையனுடன் சண்டை போடுவார். அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் அப்படியே இருந்துவிட்டேன்” என்றார்.

    விஜய் பத், கோல் மேன் அகெய்ன், திரிஷ்யம், போன்ற படங்களில் தபுவும் அஜய் தேவ்கனும் ஜோடியாக நடித்துள்ளனர். அஜய் தேவ்கனை நடிகை கஜோல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மான்வேட்டை வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட நட்சத்திரங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. #BlackBuckPoachingCase #SonaliBendre
    அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டில் 1998ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.



    கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், நடிகை சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, நடிகர் சயீப் அலிகான் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் கீழ்கோர்ட்டில் விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #BlackBuckPoachingCase #SonaliBendre
    பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ‘காதல் தேசம்’ படம் மூலம் புகழ் பெற்றவருமான தபு, தான் திருமணம் செய்யாததற்கு பிரபல நடிகர் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். #Tabu
    இந்தியில் பிரபல நடிகையான தபு தமிழில் சிறைச்சாலை, காதல் தேசம், இருவர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 1980இல் இருந்து நடித்துவரும் தபுவுக்கு 46 வயது ஆகிறது. ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ள வில்லை.

    அதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். “நான் இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் இருக்கிறேன். இப்படி இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். திருமணம் செய்து கொண்டு வாழ்வது சிறப்பானதா? தனியாக இருப்பது நல்லதா? என்று கேட்கிறார்கள்.

    எனக்கு ஒரு பகுதி மட்டுமே தெரியும். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது. இன்னொரு பகுதி தெரியாது. அதனால் இந்தக் கேள்விக்கு எப்படி என்னால் பதில் சொல்ல முடியும். எனக்கு அந்த அனுபவம் இருந்தால் திருமணம் சிறந்ததா? திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சிறந்ததா? என்பதைச் சொல்லியிருப்பேன்” என்றார்.



    மேலும் தனக்கு திருமணம் ஆகாததற்குக் காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான் என கூறி இருக்கிறார் “நானும், அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரர் சமீர் ஆர்யாவின் நண்பர். எனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார்.

    என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார். அவரால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அதனால் எனக்கு வருத்தம் இல்லை” என அவர் தெரிவித்திருக்கிறார். நடிகர் அஜய் தேவ்கன் 1999ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    ×