என் மலர்
நீங்கள் தேடியது "நாகார்ஜூனா"
- நாகார்ஜுனாவும், தபுவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
- படத்தின் காட்சிகளில் இருவரது கெமிஸ்ட்ரி பல்வேறு வதந்திகளை கிளப்பியது.
தென்னிந்திய திரை உலகில் காதல் மன்னனாக வலம் வந்தவர் நாகார்ஜுனா. திரை உலகில் இவருக்கென தனி ரசிகைகள் கூட்டம் இருந்தது.
நாகார்ஜூனா தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ரஜினி நடித்த கூலி படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் நாகார்ஜுனா மீண்டும் கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். நாகார்ஜூனா நடிக்கும் 100-வது படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை தபு நடிக்கிறார்.
நாகார்ஜுனாவும், தபுவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். படத்தின் காட்சிகளில் இருவரது கெமிஸ்ட்ரி பல்வேறு வதந்திகளை கிளப்பியது.
இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனாவும் தபுவும் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
- நாகார்ஜூனா குடும்பத்தில் நடைபெறும் இரண்டாவது பெரிய திருமணம் இதுவாகும்.
நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஸைனாப்பை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் அதிகாலையில் நடைபெற்றது. திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய முறைப்படி நடந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணத்திற்குப் பிறகு, ஒரு வருடத்திற்குள் நாகார்ஜூனா குடும்பத்தில் நடைபெறும் இரண்டாவது பெரிய திருமணம் இதுவாகும்.
வரும் ஞாயிறு ஜூன் 8-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜூனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூரனா ஸ்டூடியோசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இணைய உள்ளார்
- முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் தலைவர் -171 படம் தங்க கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகியது.
ரஜினியுடன் நடிகை ஷோபனா 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் ரஜினியின் மகளாக ஸ்ருதி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .இப்படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ''டைட்டில்' இன்று மாலை ( 22 - ந் தேதி) 6 மணிக்கு வெளியாக உள்ளது. தலைவர் - 171 படத்துக்கு 'டைட்டில்' கழுகு, ராணா, தங்கம் அல்லது கடிகாரம் என 4 பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இந்த 4 ல் ஒன்று தான் இப்படத்தின் டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இணைய உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






