என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது.
- குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி ஒரு சலூன் கடையை வைத்துள்ளார். வீட்டில் உள்ள லட்சுமி காணாமல் போனது என்று போலிஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கிறார். அந்த லட்சுமி யார் என போலிஸ் விசாரிக்கிறது. யார் அந்த லட்சுமி என்பதை மர்மமாகவே வைத்திருக்கின்றனர். டிரைலர் மிகவும் சஸ்பன்சோடு அமைந்திருக்கிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்பொழுது உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
- இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.
சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர்.
சூர்யா 44 படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதைதொடர்ந்து உறியடி விஜயகுமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும், மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
- இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்கலில் 'All Eyes On Rafah" 2என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இருத்தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்திற்கு வராமல் போர் தொடுத்து வருகின்றனர்.
நேற்று இஸ்ரேலி டிஃபன்ஸ் ஃபோர்ஸ் ரஃபாபில் உள்ள அகதிகள் முகாமில் ஏவுகனைகளை வீசினர், இந்த தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 45 பேர் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.
இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து 'All Eyes On Rafah" புகைப்படத்தை பகிர்ந்து இந்திய திரையுலக பிரபலங்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆலியா பட், டியா மிர்ஸா, கரீனா கபூர், ரிச்சா, வருண் தவான்,ராஷ்மிகா மந்தனா, திரிஷா, சமந்தா, பார்வதி, துல்கர் சல்மான் போன்றவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" படத்தை பதிவிட்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
- 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார்.
ஆர்.ஜே பாலாஜி 2013 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
அதைத்தொடர்ந்து புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, போன்ற படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் வெளியான 'பதாய் ஹொ' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்து இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் ஆனால் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் மூக்குத்தி அம்மன் படத்திற்கு தொடர்ச்சியாக இருக்காது எனவும். இப்படம் வேறு கதைக்களத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ஆர் ஜே பாலாஜி முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் மூக்குத்தி அம்மன் 2 இல்லாமல், வேறு தலைப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிர்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார்.
- அமரன் படத்தில் சிவகார்த்தியேகன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு விருந்தளித்தார்.
அமரன் படத்தில் சிவகார்த்தியேன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்ற வாரம் முடிவடைந்த நிலையில் . படத்தில் பணியாற்றியவர்களுக்கு கறி விருந்து சிவகார்த்திகேயன் அளித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
மேலும் படத்தின் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் ஃபாசில் நிறுவன வாட்சை பரிசளித்தார். தற்பொழுது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் #Sk 23 படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகளும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டார்.

இந்த வீடியோவில் ஆர்த்தி கர்ப்பமான வயிறுடன் காணப்படுகிறார். இதனால் இன்னும் சில மாதத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க போகிறது என உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு மகள் 'ஆராதனா' மற்றும் மகன் 'குகன்' உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐதராபாத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்.
நடிகை நிவேதா பெத்துராஜ் காரை நிறுத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் தன்னுடைய கார் டிக்கியை திறக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ்ஜின் காரை மடக்கிய போலீசார் சோதனை செய்துள்ளனர். நிவேதா பெத்துராஜிடம் காரின் டிக்கியை திறக்க சொல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நடிகை நிவேதா பெத்துராஜ் காரின் டிக்கியை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
போலீசாருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த வீடியோ விரைவில் வெளிவரும் அவரது தெலுங்கு படத்திற்கான புரோமோஷனுக்காகவா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
- படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் பங்கேற்றனர்.
- சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கில் 'கேங்ஸ் ஆஃப் கோதவரி' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ண சைதன்யா இயக்கி உள்ளார். கதாநாயகனாக விஷ்வாக் சென் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜு ரமணா, ஆயிஷா கான் உள்பட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் எதற்காக அப்படி செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் நடிகை அஞ்சலியும் மற்றவர்களும் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டு சிரிக்கின்றனர்.
வீடியோவில், நிகழ்ச்சி மேடையில் அனைவரும் நின்றிருக்க அஞ்சலியை நோக்கி கையை நீட்டும் பாலகிருஷ்ணா தள்ளி நிற்கும்படி கூறுகிறார். இதை கவனிக்காத அஞ்சலியின் தோளை பிடித்து பின்னோக்கி தள்ளினார். இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி 2 அடி பின்னால் சென்று நின்றார். அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Appalling behaviour by Balakrishna and an understandable reaction by the junior artist who laughed it off, but the most horrifying part of this video is the crowd's reaction to a blatant act of assault, cheering and hooting in approval.
— Siddharth (@DearthOfSid) May 29, 2024
pic.twitter.com/kVO1UgYsP1
- சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்.
- இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.

சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர். சூர்யா 44 படக்குழு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்த போஸ்டர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
- இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி ஐதராபாத் நகரில் படப்பிடிப்புக்கு இடையே, நடிகர் அஜித் குமார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்துள்ளார்.

ஐதராபாத் நகரில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் விஷ்வம்பரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. விஷம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சிரஞ்சீவி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட படம், தொடர்பான இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "அமரன்." இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு விருந்தளித்தார்.
அமரன் படத்தில் சிவகார்த்தியேகன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட் வித்தியாசமாக அமைந்தது. மேலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவகார்த்தியேகன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் "முகந்தன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது
- ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் இன்று (மே 29) வெளியிடுவதாக தகவல் வெளியானது.
வெங்கட் பிரபு வெளியிட்ட 'நான் வயலன்ஸ்' படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!
தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு 'நான் வயலன்ஸ் {NON Violence}' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் இன்று (மே 29) வெளியிடுவதாக தகவல் வெளியானது. அதன்படி இன்று காலை காலை 11 அளவில் இருவரும் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் 'நான் வயலன்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் எடுக்கப்பட்டு வருவைது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






