வீட்ல லட்சுமி திருட்டுபோச்சு - சஸ்பென்ஸ் நிறைந்த 'மகாராஜா' டிரைலர்

விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது.குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
வீட்ல லட்சுமி திருட்டுபோச்சு - சஸ்பென்ஸ் நிறைந்த 'மகாராஜா' டிரைலர்
Published on

விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி ஒரு சலூன் கடையை வைத்துள்ளார். வீட்டில் உள்ள லட்சுமி காணாமல் போனது என்று போலிஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கிறார். அந்த லட்சுமி யார் என போலிஸ் விசாரிக்கிறது. யார் அந்த லட்சுமி என்பதை மர்மமாகவே வைத்திருக்கின்றனர். டிரைலர் மிகவும் சஸ்பன்சோடு அமைந்திருக்கிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்பொழுது உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com