என் மலர்
சினிமா செய்திகள்
- இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
- இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான நீலோற்பம் இன்று வெளியாகியுள்ளது.
தாமரை எழுதியுள்ள இப்பாடல் சித்தார்த் - ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இடையிலான ரொமான்டிக் மெலடி பாடலாக உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
- இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் இந்தியா முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியடைந்தது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.
இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.
அதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி' (The Couple Song) என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.
இந்த பாடலை தமிழில் விவேகா எழுதியுள்ள நிலையில் ஸ்ரேயா கோஷல் அனைத்து மொழிகளிலும் இப்பாடலை பாடியுள்ளார். முதல் பாகத்தில் "சாமி" பாடல் பலத்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த பாடல் மெலடியாக அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'சூது கவ்வும் 2' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.
- படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான பாடம் 'சூது கவ்வும்'. சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.

ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் சூது கவ்வும் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 'மண்டைக்கு சூறு ஏறுதே' என்ற பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்திலிருந்து 'பேட் பாய்ஸ் மிஷன்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத், இப்பாடலை எழுதி பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தயாரிப்பு நிறுவனம் விரைவில் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரே படத்தில் இருவரும் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியின் "கோமாளி" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் "லவ் டுடே" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றன. பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவனின் "எல்ஐசி" மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் "டிராகன்" ஆகிய இரண்டு படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
"எல்ஐசி", "டிராகன்" படங்கள் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் விரைவில் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியான படம் பிரேமலு. இந்த படத்தில் நஸ்லேன், 'சச்சின்' என்ற கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மமிதா பைஜூ. அதில் இவரது பெயர், ரீனு. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றது. இதையடுத்து மமிதா பைஜூக்கு படங்கள் வரிசை கட்டி நின்றன. அந்தவகையில் மமிதா பைஜூ முதன் முதலில் நடித்த தமிழ் படம் 'ரெபல்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஒரு முனையில் பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் என்ற நிலையில் மற்றொரு முனையில் மமிதா பைஜூ மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஒரே படத்தில் இருவரும் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
- பிரதமர் மோடியின் பயோபிக்-ல் நான் நடிக்கவில்லை.
விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில், இயக்குநர் மில்டன், விஜய் ஆண்டனி, மெகா ஆகாஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட சத்யராஜிடம் மோடி பயோபிக் படத்தில் நடிப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "பிரதமர் மோடியின் பயோபிக்-ல் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் படத்தை இயக்க முன் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மோடி பயோபிக்-ஐ என் நண்பர் மணிவண்ணன் போன்ற இயக்குனர் இயக்கினால் அப்படியே தத்ரூபமாக எடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இளம் நடிகையின் புகாரின் பேரில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நெடும்பாசேரி போலீசார் விசாரணை நடத்தினர்.
- இயக்குனர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஒமர் லுலு. இவர் 'ஹேப்பி வெட்டிங்', 'ஒரு அடார் லவ்', 'நல்ல சமயம்', 'தமாக்கா', 'சங்ஸ்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமானார்.
இந்நிலையில் இயக்குனர் ஒமர் லுலு மீது இளம் நடிகை ஒருவர் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாலியல் புகார் கொடுத்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரின் மீது அந்த பெண் புகார் கூறியிருக்கிறார். அதன் பேரில் விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.
இதையடுத்து இளம் நடிகையின் புகாரின் பேரில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நெடும்பாசேரி போலீசார் விசாரணை நடத்தினர். நடிகையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குனர் ஒமர் லுலு மீது 376 (கற்பழிப்பு) சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். இயக்குனர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது புகார் கொடுத்துள்ள நடிகையுடன் தனக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும், அந்த நட்பை இழந்ததன் காரணமாக தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக மிரட்டி பணம் பறிப்பதற்காக நடிகை தன் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்துள்ளதாக இயக்குனர் ஒமர் லுலு தெரிவித்திருக்கிறார்.
- ஓய்வுக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அபுதாபிக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.
- ஒவ்வொரு வருடமும் ரஜினி தான் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மீக பயணமாக இமயமலை செல்வது வழக்கம்.
ரஜினி நடித்துள்ள 'வேட்டையன்' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
அடுத்ததாக ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் ஓய்வுக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அபுதாபிக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.
ஒவ்வொரு வருடமும் ரஜினி தான் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மீக பயணமாக இமயமலை செல்வது வழக்கம். கடந்த ஆண்டு இமயமலை சுற்றுப்பயணம் சென்ற ரஜினி பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு சென்றார்.
அந்த வகையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப் பயணம் செய்வதற்காக இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 11.30 மணிக்கு விஸ்தாரா விமானத்தில் டெல்லி சென்று அங்கிருந்து இமயமலை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இமயமலையில் நண்பர்களுடன் ஒரு வாரம் தங்கி இருப்பார் என கூறப்படுகிறது.
இமயமலைக்கு புறப்பட்டு செல்லும் முன்பு போயஸ் கார்டனில் அவர் அளித்த பேட்டியில், "ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்வேன். அங்கு பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய இடங்களுக்கு செல்ல இருக்கிறேன். இமயமலையில் 1 வாரம் தங்கியிருப்பேன்" என்றார்.
தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கிறீர்களா?
பதில்:- மன்னிக்கவும். அரசியல் கேள்விகள் வேண்டாமே.
கேள்வி:- தமிழ் சினிமாவில் இசையா? பாடலா? என்ற பிரச்சனை போய் கொண்டிருக்கிறதே?
பதில்:- கை கூப்பியபடி அண்ணா நோ கமெண்ட்ஸ்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது.
- போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படக்குழு இன்று காலை 11 மணிக்கு BIG ANNOUNCEMENT வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தது.
விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. நேற்று (மே 28) போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படக்குழு இன்று(மே 29) காலை 11 மணிக்கு BIG ANNOUNCEMENT வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாளை (மே 30) 'மகாராஜா' பராக்.. டிரைலர் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதிமகாராஜா படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், காத்திருப்பு முடிவுக்கு வந்தது.. நாளை மாலை 5 மணிக்கு மகாராஜாவின் உலகத்தைக் காண அனைவரும் தயாராக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- பலர் என்னிடம் உதவி கேட்டு மனுக்கள் அளித்து வருகின்றனர்.
- கடைசி வரை என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்வேன்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனியில் தன்னார்வலர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் பாலா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்.
அப்போது அவருடன் ஏராளமானோர் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் பாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உதவி செய்தாலே அடுத்து அரசியலுக்கு வருகிறீர்களா? என கேட்கிறார்கள். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு அறவே கிடையாது. பல்வேறு இடங்களுக்கு சென்று என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். அப்போது பலர் என்னிடம் உதவி கேட்டு மனுக்கள் அளித்து வருகின்றனர்.
அதனை படித்து அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகின்றேன். கடைசி வரை என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹமீது மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
- கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை தாக்கல்.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அரூரை சேர்ந்த ஹமீது புகார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஹமீது மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
படத் தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி, சவுபின் ஷாகிர், பாபு ஷாகிர் ஆகியோரின் முன் ஜாமின் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
படப்பிடிப்பு துவங்கும் முன்பே, படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக ஹமீதுவிடம் பணம் பெற்று, 18.65 கோடி செலவான நிலையில் 22 கோடி செலவானதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பரவா ஃபிலிம்ஸ் ஒரு ரூபாய் கூட ஹமீதுக்கு வழங்கவில்லை என்றும் பொய்யான தகவல்களை கூறி அவருடன் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
- இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயம் ரவி. இவர் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் "காதலிக்க நேரமில்லை" படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தை அடங்கமறு மற்றும் சைரன் படங்களை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத வாக்கில் துவங்க இருப்பதாக தெரிகிறது.
இந்த படம் கிராம பின்னணியில் உருவாகும் குடும்ப பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய எதற்கும் துணிந்தவன் படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
- தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படம் ராயன். தனுஷ் நடித்து, இயக்கியுள்ள ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இந்த படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தின் இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், ராயன் படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் பணிகள் நிறைவுபெற்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ராயன் படத்திற்கான பின்னணி இசை பணிகள் நிறைவுபெற்றன. புயல் வந்து கொண்டு இருக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






