'நீலோற்பம் நீரில் இல்லை' - தாமரை வரிகளில் வெளியான இந்தியன் 2 மெலடி பாடல்

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'நீலோற்பம் நீரில் இல்லை' - தாமரை வரிகளில் வெளியான இந்தியன் 2 மெலடி பாடல்
Published on

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான நீலோற்பம் இன்று வெளியாகியுள்ளது.

தாமரை எழுதியுள்ள இப்பாடல் சித்தார்த் - ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இடையிலான ரொமான்டிக் மெலடி பாடலாக உருவாகியுள்ளது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com