இளம் நடிகை பாலியல் புகார்- மலையாள திரைப்பட இயக்குனர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு

இளம் நடிகையின் புகாரின் பேரில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நெடும்பாசேரி போலீசார் விசாரணை நடத்தினர்.இயக்குனர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் நடிகை பாலியல் புகார்- மலையாள திரைப்பட இயக்குனர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு
Published on

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஒமர் லுலு. இவர் 'ஹேப்பி வெட்டிங்', 'ஒரு அடார் லவ்', 'நல்ல சமயம்', 'தமாக்கா', 'சங்ஸ்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமானார்.

இந்நிலையில் இயக்குனர் ஒமர் லுலு மீது இளம் நடிகை ஒருவர் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாலியல் புகார் கொடுத்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரின் மீது அந்த பெண் புகார் கூறியிருக்கிறார். அதன் பேரில் விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து இளம் நடிகையின் புகாரின் பேரில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நெடும்பாசேரி போலீசார் விசாரணை நடத்தினர். நடிகையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குனர் ஒமர் லுலு மீது 376 (கற்பழிப்பு) சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். இயக்குனர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்மீது புகார் கொடுத்துள்ள நடிகையுடன் தனக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும், அந்த நட்பை இழந்ததன் காரணமாக தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக மிரட்டி பணம் பறிப்பதற்காக நடிகை தன் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்துள்ளதாக இயக்குனர் ஒமர் லுலு தெரிவித்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com