'சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி' - வரவேற்பை பெறும் புஷ்பா 2 பாடல்

புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி' - வரவேற்பை பெறும் புஷ்பா 2 பாடல்
Published on

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் இந்தியா முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியடைந்தது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.

அதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி' (The Couple Song) என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

இந்த பாடலை தமிழில் விவேகா எழுதியுள்ள நிலையில் ஸ்ரேயா கோஷல் அனைத்து மொழிகளிலும் இப்பாடலை பாடியுள்ளார். முதல் பாகத்தில் "சாமி" பாடல் பலத்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த பாடல் மெலடியாக அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com