'மகாராஜா' பராக்.. டிரைலர் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படக்குழு இன்று காலை 11 மணிக்கு BIG ANNOUNCEMENT வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தது.
'மகாராஜா' பராக்.. டிரைலர் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி
Published on

விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. நேற்று (மே 28) போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படக்குழு இன்று(மே 29) காலை 11 மணிக்கு BIG ANNOUNCEMENT வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நாளை (மே 30) 'மகாராஜா' பராக்.. டிரைலர் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதிமகாராஜா படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், காத்திருப்பு முடிவுக்கு வந்தது.. நாளை மாலை 5 மணிக்கு மகாராஜாவின் உலகத்தைக் காண அனைவரும் தயாராக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com