என் மலர்
சினிமா செய்திகள்
- ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்".
- கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர்
ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் மே 29 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் ஆண்டனி ஒரு சிறிய நாய் குட்டி மற்றும் பக்கத்தில் குடையை வைத்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார். இப்படம் எவ்விதமான கதைக்களத்துடன் அமைந்து இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தொடர்பான இதர அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
- இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
மேலும், இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தற்பொழுது படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் BIG ANNOUNCEMENT நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இது படத்தின் ரிலீஸ் தேதியை பற்றி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
- இப்பாடலிற்கு ’நீலோற்பம்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். படத்தின் அடுத்த பாடலை மே 29 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது குறித்து போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டனர்.
இப்பாடலிற்கு 'நீலோற்பம்' என தலைப்பு வைத்துள்ளனர். பாடலின் ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. முழுப் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் ’புஜ்ஜி அட் அனுப்பட்டி’.
- இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.
அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.
இப்படத்தில் கமல்குமார்,நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,கார்த்திக் விஜய் ,குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,லாவண்யா கண்மணி,நக்கலைட்ஸ் ராம்குமார் ,நக்கலைட்ஸ் மீனா ,வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக மே 31-ல் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் இயக்குனர் பேசியதாவது.

நண்பர் வேல் மாணிக்கம் மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் கேட்டபோது .அவர் பார்க்கலாம் என்றார். எடுத்த காட்சிகளை எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம். பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார் . சில நாள் எதுவுமே கருத்து சொல்லாமல் இருந்தார் .பிறகு சந்தித்த போது,என் மகள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். ஆடு கிடைத்ததா இல்லையா என்று. படம் அவருக்குப் பிடித்திருந்தது சம்பளம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் யோசித்தபோது, அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்றார் .எங்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டிச் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்து படத்தை உயர்த்தி உள்ளார்.
இப்படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- . இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
- இப்பாடலிற்கு 'நீலோற்பம்' என தலைப்பு வைத்துள்ளனர்.
28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். படத்தின் அடுத்த பாடலை மே 29 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது குறித்து போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டனர்.
இப்பாடலிற்கு 'நீலோற்பம்' என தலைப்பு வைத்துள்ளனர். பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. முழுப் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன்
- ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
அந்த வகையில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது இப்படத்திற்கு 'நான் வயலன்ஸ் {NON Violence}' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் அவர்களின் எக்ஸ் தளத்தில் நாளை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் 2024 ஆண்டிலேயே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
- இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.
இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.
அதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'சூசெகி (The Couple Song)'பாடல் நாளை காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது. இதுக்குறித்தான ப்ரொமோ வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில். தற்பொழுது படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மந்தன்னாவும் சந்தோஷமாக ஆடுவது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. முதல் பாடல் வெற்றியை தொடர்ந்து இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"
- 'காதலிக்க நேரமில்லை' முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"
ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை

'காதலிக்க நேரமில்லை' முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.
- ஹிந்தியில் சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.சாதிய கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார் மாரி செல்வராஜ்.
பின் நாட்களில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் கூர்மையான சமூக அரசியல் கருத்துக்களை கூறுவதற்கு பரியேறும் பெருமாள் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் சமீபத்திய படங்களில் தவிர்க்க முடியாத கிளாசிக் படமாக மாறியது. இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை தயாரித்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் கதைக்களத்துடன் ஒத்துப்போவதால் 'தடக்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 'தடக் 2' என்ற பெயரில் பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது என்ற அறிவிப்பை கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார்.

சித்தாந்த் சதுர்வேதி மற்றும் துருப்தி டிம்ரி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோவில் , கல்வி, கிளர்ச்சி, வகுப்பு மற்றும் ஜாதி பாகுபாடுகளுக்கு எதிரான பல முழக்கங்களைக் காண்பிக்கும் சுவர் ஓவியம் இடம்பெற்றுள்ளது. தலித் காதல் முக்கியம், உங்கள் சிந்தனையை மாற்றுங்கள், சமூகத்தை மாற்றுங்கள், அமைதியைக் குலைக்க காதலர்கள் இங்கே இருக்கிறார்கள், மற்றும் எதிர்ப்பு சமத்துவமாகிறது உள்ளிட்ட வாசனகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அதே சுவரில் ஒரு காலத்தில் ஒரு ராஜா, ஒரு ராணி இருந்தார்கள். அவர்களின் சாதிகள் வெவ்வேறாகும், இதனால் கதை முடிந்தது என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
- இது குழந்தைகளில் பொதுவானது. ஆனால் பெரியவர்களையும் பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
பிரபல தென்னிந்திய நடிகர் பகத் பாசில், தனது 41 வயதில் கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு நோய் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டது என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொத்தமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆவேசம் மற்றும் புஷ்பா பட நடிகர் பகத் பாசில் கலந்து கொண்டார். அப்போது பேசிய பகத் பாசில், கிராமத்தில் சுற்றித் திரியும் குழந்தைகளுக்கு இந்த நோயைக் குணப்படுத்துவது எளிதா என டாக்டரிடம் கேட்டேன். சிறு வயதிலேயே இதைக் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என அவர் கூறினார். 41 வயதில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியுமா என்றும் கேட்டேன் என தெரிவித்தார்.
கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும். இது மூளையின் கவனம், நடத்தை மற்றும் உந்துவிசைக் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறனைப் பாதிக்கிறது. இது குழந்தைகளில் பொதுவானது. ஆனால் பெரியவர்களையும் பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
- குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
- இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். துணிவு படத்தைத் தொடர்ந்து இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த போஸ்டருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.
இந்த நிலையில், அஜித் குமாரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. கட்டம் போட்ட சட்டையில், சிரித்த முகத்துடன் காணப்படும் அஜித்தின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படமானது கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
- 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்துக் கொண்டு வரும் ஃப்ரான்சிஸ் படமாக அரண்மனை வளர்ந்து வருகிறது, ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து சுந்தர் சி அரண்மனை1 படத்தை 2014 ஆம் ஆண்டு இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த இரண்டு பாகத்தை இயக்கினார்.
இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் சுந்தர்.சி-க்கு தங்கையாக தமன்னா நடிக்க, தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் பாடல் ஒன்றுக்கு குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர்.
இந்த படமானது கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் 2024 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்த முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் சமீப காலமாக பல மலையாள திரைப்படங்கள் அசால்டாக நூறு கோடியை தட்டி தூக்கி சென்ற நிலையில், அரண்மனை 4 திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மேலும் கோடை விடுமுறை என்பதால் ரசிகர்கள் குடும்பத்துடன் அரண்மனை 4 திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். அதன்படி தற்போது இந்த படம் 25 நாட்களையும் நெருங்கி உள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். படம் தமிழ் , தெலுங்கு மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தை இந்தியிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் அதற்கான டிரைலரையும் இன்று வெளியிட்டனர்.
ஸ்டார், பிடி சார், ரசவாதி போன்ற படங்களும் கடந்த சில வாரங்களில் வெளியாகி இருந்தாலும், அரண்மனை 4 திரைப்படமும் அதற்கு இணையாக போட்டி போட்டு வசூலளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






