`மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் நாளை வெளியீடு

ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர்
`மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் நாளை வெளியீடு
Published on

ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் மே 29 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் ஆண்டனி ஒரு சிறிய நாய் குட்டி மற்றும் பக்கத்தில் குடையை வைத்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார். இப்படம் எவ்விதமான கதைக்களத்துடன் அமைந்து இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தொடர்பான இதர அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com