என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழ் திரையுலக ரசிகர்களை ‘ஹாய் மச்சான்’ என அழைத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நமீதா.
- எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.
தமிழ் திரையுலக ரசிகர்களை 'ஹாய் மச்சான்' என அழைத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நமீதா.நடிகை நமிதா, கடந்த 2004 இல் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.
விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நமீதாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நமீதா திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தை கவனித்துக் கொண்டு சினிமா நடிப்புக்கு இடைவெளிவிட்ட நிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நமீதாவும் அவரது கணவரும் பிரிய இருப்பதாக தகவல்கள் பரவியது. இதுபற்றி நமீதா கூறியதாவது:-
நானும் என் கணவரும் பிரிய இருப்பதாக வதந்தி பரவி இருப்பது சில தினங்களுக்கு முன்புதான் எனக்கு தெரியும். இதையடுத்து நான் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன்.
அப்படி இருந்தும் வதந்தி நிற்பது போல் தெரியவில்லை. சினிமாவில் ஏராளமான வதந்தியை பார்த்து விட்டதால் இதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. வதந்திகளை பார்த்து கணவரும் நானும் சிரித்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டுள்ளது.
- எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டுள்ளது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அஞ்சாமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விதார்த், வாணி போஜன் குழந்தைகளுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படமும், இவர்களின் பின்னணியில் நீட் கொடுமையை எடுத்துரைக்கும் செய்தி அடங்கிய செய்தி தாள் தீயில் எரியும் படமும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம்சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் நீட் பரிச்சையின் மூலம் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். தற்பொழுது சூழ்நிலையில் கல்வி எப்படி வியாபாரமாக்கப் படுகிறது என்பதை மையமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும் என இயக்குனர் எஸ்.பி சுப்புராமன் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
- அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாடலை ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தற்போது தி கோட் (THE GREATEST OF ALL TIME) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த படம் சைஃபை டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விசில் போடு எனும் பாடல் போன்றவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாடலை ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யா, திருவனந்தபுரம், சென்னை போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
அதேசமயம் இந்த படத்தின் 50 சதவீத டப்பிங் பணிகளையும் நடிகர் விஜய் நிறைவு செய்துள்ளார். படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளும் நிறைவடைந்ததாக சமீபத்தில் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்று ஆரம்பத்திலேயே தகவல் வெளியானது. அதன்படி அப்பாவாக நடிக்கும் விஜய்க்கு நடிகை சினேகா ஜோடியாகவும் மகனாக நடிக்கும் விஜய்க்கு நடிகை மீனாட்சி சௌத்ரி ஜோடியாகவும் நடிக்கின்றனர்.
ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இதன் கூடுதல் தகவல் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய், இரட்டை வேடங்களில் அல்லாமல் மூன்று வேடங்களில் நடிப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
மூன்றாவதாக நடிக்கும் விஜய்யின் கதாபாத்திரத்தை படக்குழு சர்ப்ரைஸாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர்.
- இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்ற நிலையில். சிம்புவுக்கான ப்ரோமோ காட்சிகளை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர்.
பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.
இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது. சமீபத்தில் சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார்.
இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்ற நிலையில். சிம்புவுக்கான ப்ரோமோ காட்சிகளை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். அந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சிம்பு இப்படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
தற்பொழுது படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் குழந்தைகளுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் சிம்பு அனைத்து சிறுவர்களுக்கு கை கொடுத்து, அன்பாக அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
- நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலை வைத்து மணி ரத்னம் தக் லைஃப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தனக்கான கதையை தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றவர் அசோக் செல்வன்.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்களும் வெற்றி பெற்றன.
அதைத் தொடர்ந்து அசோக்செல்வன் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் ஓடிடி திரைப்படமாக வெளியானது. அடுத்ததாக எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தில் நடித்து வெளியாக தயாராகவுள்ளது.
நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலை வைத்து மணி ரத்னம் தக் லைஃப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் திரிஷா, சிம்பு, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் ஜெயம் ரவி கதாப்பாத்திரத்திற்கு மாற்றாக அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "உண்மையான மறக்கமுடியாத நாட்கள், அதிசயங்களும் நடக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். கமல் நடிப்பில் வெளியான சத்யா படத்தின் ரீமேக்கில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிப்பது கூடுதல் தகவலாகும்.
இதன் மூலம் அசோக் செல்வன், தக் லைஃப் படத்தில் தான் நடிக்கப் போவதை தெரிவித்துள்ளார் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருவதோடு அசோக் செல்வனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான ஆனந்த் ஆடியோ வாங்கியுள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகரான துருவா சர்ஜா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.

"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது.
KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்', சரத்குமார் நடிப்பில் வெளியான 'மாயி', 'திவான்' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ்.
- இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த 'அதிபர்' என்ற படத்தை இயக்கினார்.
நடிகர் ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்', சரத்குமார் நடிப்பில் வெளியான 'மாயி', 'திவான்' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ். இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த 'அதிபர்' என்ற படத்தை இயக்கினார். பின்பு, இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வருசநாடு' திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். இந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 'எனது நடிப்பில் வெளியான 'மாயி', 'திவான்' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
- இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
- லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். படத்தின் அடுத்த பாடலை மே 29 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது குறித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஒரு கஃபேவில் அமர்ந்தபடி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் ரொமேண்டிக் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்டின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது.
படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்தது.
- பிரியமானவளே, புலி போன்ற படங்களில் தனது குரலில் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கொடுத்துள்ளார்.
விஜய் ஏற்கனவே தான் நடித்த சில படங்களில் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார். அந்த வகையில் 'GOAT' படத்தில் 2 பாடல்களை பாடியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
விஜய் தான் நடித்த படங்களில் பாடியுள்ள பாடல்கள் விவரம்:-
ரசிகன் படத்தில் 'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வித்தாப்பாரு செவத்த குட்டி'
தேவா படத்தில் 'கோத்தகிரி குப்பம்மா... கோவப்பட்டா தப்பம்மா...'
காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தில் 'அஞ்சா நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே...'
காதலுக்கு மரியாதை படத்தில் 'விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே.. இரவு பகலாக; இதயம் கிளியாகிப் பறந்ததே...'
பிரியமுடன் படத்தில் 'மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல'
நிலாவே வா படத்தில் 'நிலவே நிலவே, நிலவே நிலவே நில்லு நில்லு திறவாய் மொழிகள் சொல்லு'
பத்ரி படத்தில் 'என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல'
உள்ளத்தை கிள்ளாதே படத்தில் 'உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே....'
துப்பாக்கி படத்தில் 'கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்துல...'
தலைவா படத்தில் 'வாங்கனா வணக்கங்கனா... மை சாங்க நீ கேளுங்கண்ணா நா...'
ஜில்லா படத்தில் 'கண்டாங்கி... கண்டாங்கி...கட்டி வந்த பொண்ணு...'
கத்தி படத்தில் 'செல்பி புள்ள... செல்ஃபி புள்ள...'
தெறி படத்தில் 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லா குட்டியே...'
பைரவா படத்தில் 'பாப்பா... பாப்பா... பப்பரப்பா...'
பிகில் படத்தில் 'நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் நம்ம சனம் வெறித்தனம்
மாஸ்டர் படத்தில் 'குட்டி ஸ்டோரி...'
பீஸ்ட் படத்தில் 'ஜாலியோ ஜிம்கானா...'
பிரியமானவளே, புலி போன்ற படங்களில் தனது குரலில் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதேபோல் 'GOAT' படத்திலும் விஜய் பாடியுள்ள பாடல்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து உள்ளனர்.
- 1986-ல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் பாரத்' படம் பெரும் வரவேற்பை பெற்றது.
- ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா...’ என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த கூலி படத்தின் டீசரில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்று இருந்த 'வா வா பக்கம் வா' என்ற பாடலின் இசை இடம்பெற்று இருந்தது. 'தங்கமகன்' படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாதான் இசையமைத்து இருந்தார். இதனையடுத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த இசையை கூலி டீசரில் பயன்படுத்தி இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
கூலி டீசரில் இடம்பெற்று இருக்கும் 'வா வா பக்கம் வா' என்ற பாடலின் இசையை பயன்படுத்த உரிய அனுமதி வாங்கவேண்டும். அப்படி வாங்கவில்லை என்றால் அந்த டீசரில் இருந்து அந்த இசையை நீக்கவேண்டும். அப்படி எதுவும் செய்யாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் அந்த நோட்டிசில் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் சத்யராஜ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியுடன் சத்யராஜ் நடிப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவில்லை என்றும் ரஜினிகாந்தின் நண்பராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, 1986-ல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் பாரத்' படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி.சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த்- சத்யராஜ் கூட்டணி இப்படத்திற்கு பலத்தை கொடுத்தது. 'என்னம்மா கண்ணு சௌக்கியமா...' என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் பூஜா ஹெக்டே சூரியாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
சூர்யா 44 படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 3 நாள்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சூர்யா அடுத்தடுத்து சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்ஹ்டிக் சுப்பராஜ் இயக்கத்தில் இந்த படத்திலும் நடித்து வருகிறார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
- தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருப்பார்.
திரையுலகில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகும் 50 ஆவது திரைப்படம் ராயன். இதனை இவரே இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள ராயன் படம் வருகிற ஜூன் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
தனுஷ் ஆரம்பக்கட்டத்தில் நடித்து வெளியான படம் "புதுப்பேட்டை." இயக்குநரும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், புதுப்பேட்டை படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி, நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒரு நடிகருக்கு திரை பயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் அழுத்தமானதாக அமையும். இதுபோன்ற கதாபாத்திரம் தான் கொக்கி குமார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த செல்வராகவனுக்கு நன்றி. நான் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். கொக்கி குமார் ஒரு எமோஷன்," என்று குறிப்பிட்டுள்ளார்.






