குழந்தையாகவே மாறிய சிம்பு - வைரலாகும் தக் லைஃப் வீடியோ

இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர்.இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்ற நிலையில். சிம்புவுக்கான ப்ரோமோ காட்சிகளை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர்.
குழந்தையாகவே மாறிய சிம்பு - வைரலாகும் தக் லைஃப் வீடியோ
Published on

பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது. சமீபத்தில் சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார்.

இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்ற நிலையில். சிம்புவுக்கான ப்ரோமோ காட்சிகளை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். அந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சிம்பு இப்படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தற்பொழுது படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் குழந்தைகளுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் சிம்பு அனைத்து சிறுவர்களுக்கு கை கொடுத்து, அன்பாக அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com