search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொக்கி குமாரு is an எமோஷன் - தனுஷ் நெகிழ்ச்சி
    X

    கொக்கி குமாரு is an எமோஷன் - தனுஷ் நெகிழ்ச்சி

    • இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
    • தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருப்பார்.

    திரையுலகில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகும் 50 ஆவது திரைப்படம் ராயன். இதனை இவரே இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள ராயன் படம் வருகிற ஜூன் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

    தனுஷ் ஆரம்பக்கட்டத்தில் நடித்து வெளியான படம் "புதுப்பேட்டை." இயக்குநரும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், புதுப்பேட்டை படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி, நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஒரு நடிகருக்கு திரை பயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் அழுத்தமானதாக அமையும். இதுபோன்ற கதாபாத்திரம் தான் கொக்கி குமார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த செல்வராகவனுக்கு நன்றி. நான் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். கொக்கி குமார் ஒரு எமோஷன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×