பணம் வேண்டாம் என்று கூறிய பிரபல இசையமைப்பாளர்

அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் ’புஜ்ஜி அட் அனுப்பட்டி’. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.
பணம்  வேண்டாம் என்று கூறிய பிரபல இசையமைப்பாளர்
Published on

அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.

இப்படத்தில் கமல்குமார்,நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,கார்த்திக் விஜய் ,குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,லாவண்யா கண்மணி,நக்கலைட்ஸ் ராம்குமார் ,நக்கலைட்ஸ் மீனா ,வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக மே 31-ல் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் இயக்குனர் பேசியதாவது.

நண்பர் வேல் மாணிக்கம் மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் கேட்டபோது .அவர் பார்க்கலாம் என்றார். எடுத்த காட்சிகளை எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம். பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார் . சில நாள் எதுவுமே கருத்து சொல்லாமல் இருந்தார் .பிறகு சந்தித்த போது,என் மகள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். ஆடு கிடைத்ததா இல்லையா என்று. படம் அவருக்குப் பிடித்திருந்தது சம்பளம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் யோசித்தபோது, அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்றார் .எங்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டிச் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்து படத்தை உயர்த்தி உள்ளார்.

இப்படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com