வெங்கட் பிரபு வெளியிடும் Non Violence படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன்ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
வெங்கட் பிரபு வெளியிடும் Non Violence படத்தின் ஃபர்ஸ்ட்லுக்
Published on

தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

அந்த வகையில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது இப்படத்திற்கு 'நான் வயலன்ஸ் {NON Violence}' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் அவர்களின் எக்ஸ் தளத்தில் நாளை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் 2024 ஆண்டிலேயே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com