கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.

இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் டீசரில் இடம் பெற்றது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர்  நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது அட்லி இயக்கத்தில் உருவாகும் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தின் வருன் குமாருக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com