`உங்களுக்காகதான் இதெல்லாம்' - இளையராஜா உருக்கம்

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் இளையராஜா.இன்று இளையராஜா அவரது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
`உங்களுக்காகதான் இதெல்லாம்' - இளையராஜா உருக்கம்
Published on

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் இளையராஜா. தமிழ் சினிமாவின் சொத்தான இளையராஜா, பல பொக்கிஷமான பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் 4500 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் ஜூன் 3 1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்தார். இன்று இளையராஜா அவரது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது" பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் தான் கூறுகிறீர்கள், ஆனால் நான் என் மகளை பறிக்கொடுத்ததால் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை, இதெல்லாம் உங்களுக்குகாகதான் தவிர எனக்கு இல்லை" என்று கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com