சூர்யா 44 - ஹீரோயின் யார் தெரியுமா? அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.
சூர்யா 44 - ஹீரோயின் யார் தெரியுமா? அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
Published on

நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படம் குறித்த இதர அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்று தெரிகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com