மீண்டும் ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா மற்றும் தினேஷ் - புதுப்பட அப்டேட்

சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.தற்பொழுது சீயான் விக்ரம் நடித்து இருக்கும் `தங்கலான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார், வரும் ஜூலை மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா மற்றும் தினேஷ் - புதுப்பட அப்டேட்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.

அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அதிகம் பேசுபவர் ரஞ்சித். நீலம் குழுமம் என்ற அமைப்பின் மூலம் நூலகம், சிறப்பு திரையிடல், மார்கழி மக்களிசை என பல மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கி வருகிறார்.

தற்பொழுது சீயான் விக்ரம் நடித்து இருக்கும் `தங்கலான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார், வரும் ஜூலை மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்திலும் அசோக் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'வேட்டுவம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் தற்பொழுது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதற்கு அடுத்து சார்பாட்டா பரம்பரை இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். வேட்டுவம் ஒரு மாடர்ன் டே கேங்ஸ்டர் கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com