search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை வீழ்ச்சி"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம், சின்னமருதூர், பெரிய மருதூர் , அய்யம்பாளையம், தண்ணீர் பந்தல், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, அரளி, செவ்வந்தி காக்கட்டான், சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து வியாபாரிகள் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர். வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டுமல்லிகை கிலோ ரூ.3000- க்கும், காக்கட்டான் ரூ. 1300-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.300- க்கும், ரோஜா கிலோ ரூ.250- க்கும், முல்லைப் பூ ரூ.2000- க்கும், செவ்வந்திப்பூ ரூ.250- க்கும், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று குண்டு மல்லிகை கிலோ ரூ.1300-க்கும், சம்பங்கி கிலோ ரூ100- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.180- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும்,செவ்வந்திப்பூ ரூ.120- க்கும், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தொடர் மலையின் காரணமாகவும் வரத்து அதிகரிப்பாலும் பூக்களின் விலை குறைந்துள்ளது.

    • பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 மடங்காக அதிகரித்து உள்ளது, அதே நேரத்தில் வெண்டைக்காய் விலை பாதியாக குறைந்து உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது பருவநிலை மாற்றம் வெண்டைக்காய் விளைச்சலுக்கு சாதகமாக இருப்பதால் வெண்டைக்காய் விளைச்சல் 2 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெண்டைக்காய் விலை பாதியாக குறைந்து உள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதங்களில் வியாபாரிகளுக்கு மொத்த விலையில் கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய், தற்போது கிலோ ரூ.7 ஆக குறைந்து உள்ளது. விலை சரிவால் வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பாத்தி கூறுகையில், கடந்த பல வருடங்களாக எங்களது விவசாய தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறோம். ஒரு கிலோ வெண்டைக்காய் விதை ரூ.7 ஆயிரத்திற்கு வாங்குகிறோம்.

    50 சென்ட் இடத்திற்கு இந்த விதை போதுமானது. 4 மாதத்தில் காய் காய்க்கும். 4 மாதம் மட்டுமே இதை அறுவடை செய்ய முடியும். பிறகு செடி வாடி விடும்.

    ஒரு கிலோ விதை வாங்கி சாகுபடி செய்ய மற்றும் மருந்து, உரம் என ரூ.30,000 வரை செலவாகிறது. ஆனால் இந்த வருடம் போட்ட முதலீடு எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தினசரி காய் பறிக்க ஒரு ஆளுக்கு ரூ.300 வரை கூலி கொடுக்க வேண்டி உள்ளது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மிகவும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். ஆனால் வியாபாரிகள் வாங்கி கிலோ ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர். வெண்டைகாய் பயிரிட்ட விவசாயிகளை காக்க அரசு நல்ல தீர்வு காண வேண்டும் என கூறினர்.

    • பரமத்தி வேலூர் தாலு–காவில் பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.
    • விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலு–காவில் சோழசிராமணி, ஜமீன்–இளம்பள்ளி, கொத்த–மங்கலம், ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், வடகரையாத்தூர், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பெரிய–சோளிபாளையம், குரும்ப–லமகாதேவி, சின்னமருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.

    இங்கு விளையும் மஞ்சள்கள் ஈரோடு பகுதி–களில் உள்ள தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது மஞ்சளுக்கு நல்ல விலை இல்லாததால் மஞ்சள் பயிரிட்டு வந்த விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதை தவிர்த்து கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்கின்றனர். தற்போது மஞ்சள் பயிர் சுமார் 500 ஏக்கர் வரை மட்டுமே சாகுபடி செய்து

    வருகின்றனர்.

    மஞ்சள் பயிரிட்ட 10-வது மாதத்தில் மஞ்சள் தலையை அறுத்து விடுகின்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து கூலி ஆட்கள் மூலம் மஞ்சளை வெட்டி எடுக்கின்றனர். பின்னர் விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என இரண்டாக பிரிக்கின்றனர். அதனை தொடர்ந்து வாகனங்கள் மூலம் ஈரோடு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர். மஞ்சளுக்கு நல்ல விலை வரும்போது விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையானது.தற்போது 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.மஞ்சள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மஞ்சள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • மரவள்ளி கிழங்கு வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
    • கவலையில் விவசாயிகள்

    கரூர்:

    கரூர் மாவட்டம், கே பரமத்தி, நொய்யல், மரவாபாளையம், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று, ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்து வருகின்றனர். மேலும், மரவள்ளிக் கிழங்கு மூலம் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.கடந்த வாரம் விவசாயிகள் மரவள்ளி கிழங்கை டன்னுக்கு, 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி சென்றனர். தற்போது, 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் கடந்த வாரம், சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது டன், 9 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே. விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் விலை குறைந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
    • இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் புரட்டாசி மாதம், மற்றும் மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர் மோகனூர் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழிசந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    சந்தைக்கு வீட்டில் வளர்க்கும் சிறுவிடை, பெருவிடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    நாட்டுக் கோழிகளுக்கு இப் பகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்வர். தரமான நாட்டு கோழிகள் கடந்த மாதங்களில் கிலோ ஒன்று ரூ.450 முதல் ரூ.550 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தை முன்னிட்டும், மகாளய அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு குறைந்த அளவிலே விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் நாட்டுகோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது. வாத்துக்கோழி ஒன்று ரூ.280 முதல் 300 வரையிலும் விற்பனையானது. இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மீன் சந்தையில், ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளும் வெளிச்சோடி காணப்பட்டது.

    • சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • 1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விலை சரிந்து வந்தது. சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    சாகுபடி செலவு செய்த பணத்தை எடுக்க முடியாமலும், பறிப்புக்கூலிக்கும் வண்டி வாடகைக்கு ம்கூட கட்டுப்படியாகாத விலை கிடைத்து வருவதால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் அவை செடியிலேயே பழுத்து வீணாகி வருகிறது. இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறியதாவது: -1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் கிடைக்கும். 1 கிலோ தக்காளி ரூ.40க்கு விற்றால் தான் விவசாயிக்கு விலை கட்டுபடியாகும். ஆனால் தற்போது தற்போது 1 கிலோ தக்காளி விவசாயிகளிடம் இருந்து ரூ.7க்கு வாங்கப்படுகிறது. டிப்பர் (14 கிலோ) ரூ.100க்கு கொள்முதலாகிறது. இந்த சூழ்நிலையில் தக்காளி வரத்தும் அதிகமாகியுள்ளது. இதனால் தக்காளி விற்பனை விலை மிகவும் சரிந்து பறிப்பு கூலி கூட கிடைக்காத நிலை உள்ளது.

    1 டிப்பர் தக்காளிக்கு அறுவடைக் கூலி ரூ. 20, வண்டி வாடகை மற்றும் சுங்கம் ரூ. 30 என ரூ .50 க்கு மேல் செலவாகிறது .இந்த நிலையில்1 டிப்பர் ரூ.90, ரூ.100க்கு தக்காளி விற்றால் எப்படி கட்டுபடியாகும். எனவே அரசு தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தக்காளி போன்ற காய்கறிகள் அதிக விளைச்சலின் போது உரிய பாதுகாப்பு இல்லாததால் வீணாகி வருகிறது. எனவே ஆங்காங்கே குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்லடம் பகுதியில் தக்காளி ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு தக்காளி விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • 1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விலை சரிந்து வந்தது.

    சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாகுபடி செலவு செய்த பணத்தை எடுக்க முடியாமலும், பறிப்புக்கூலிக்கும், வண்டி வாடகைக்கு கூட கட்டுப்படியாகாத நிலை உள்ளதால் தக்காளி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறியதாவது:- 1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் கிடைக்கும். 1 கிலோ தக்காளி ரூ.40க்கு விற்றால் தான் விவசாயிக்கு விலை கட்டுபடியாகும். ஆனால் தற்போது 1 கிலோ தக்காளி விவசாயிகளிடம் இருந்து ரூ.7க்கு வாங்கப்படுகிறது .டிப்பர் (14 கிலோ) ரூ.100க்கு கொள்முதலாகிறது. இந்த சூழ்நிலையில் தக்காளி வரத்தும் அதிகமாகியுள்ளது. இதனால் தக்காளி விற்பனை விலை மிகவும் சரிந்து பறிப்பு கூலி கூட கிடைக்காத நிலை உள்ளது.

    1 டிப்பர் தக்காளிக்கு அறுவடைக்கூலி ரூ. 20, வண்டி வாடகை மற்றும் சுங்கம் ரூ. 30 என ரூ.50 க்கு மேல் செலவாகிறது .இந்தநிலையில் 1 டிப்பர் ரூ.90, ரூ.100க்கு தக்காளி விற்றால் எப்படி கட்டுபடியாகும். எனவே அரசு தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தக்காளி போன்ற காய்கறிகள் அதிக விளைச்சலின் போது உரிய பாதுகாப்பு இல்லாததால் வீணாகி வருகிறது. எனவே ஆங்காங்கே குளிர்பதன கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பல்லடம் பகுதியில் தக்காளி ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
    • ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.

    பல்லடம் : 

    பல்லடம் சுற்று வட்டாரப் பகுதிகளான கணபதிபாளையம், கள்ளகிணறு,ஆலூத்துப்பாளையம், இலவந்தி, சித்தம்பலம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். இதில் ஏக்கருக்கு 1000 கிலோ முதல்2000 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம்.

    கோழிக்கொண்டைப்பூக்கள் சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் செடிகளில் பூக்கும். சம்பங்கி, செண்டுமல்லி ஆகிய பூ மாலைகளுக்கு அழகு சேர்க்க கோழிக்கொண்டை பூக்கள் பயன்படுகிறது. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டைப்பூக்கள் திருப்பூர் மற்றும் கோவை பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்த நிலையில் ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழி கொண்டை பூ விற்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோழி கொண்டை பூ விவசாயிகள் கூறுகையில், முன்பு முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.60 க்கு விற்ற கோழி கொண்டை பூ தற்போது ரூ.30,ஆக சரிந்து விட்டது.மேலும் தற்பொழுது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.ரோஜாவை வைத்து மாலை கட்டும் பொழுது 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் கோழிகொண்டை பூவுக்கான தேவை குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.மேலும் தற்போது கோழிகொண்டை பூ வாங்க வியாபாரிகள் முன் வராததால், பல வாரங்கள் பராமரித்து வளர்த்த செடிகளில் பூத்து குலுங்கும் பூக்கள், தற்போது செடியோடு கருகும் நிலையில் உள்ளது இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 9-ந் தேதி கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 66 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ. 90 வரை செலவாகும் நிலையில், இந்த கடும் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • கிலோவிற்கு உற்பத்தி செலவு ரூ. 20 ஆகும் நிலையில் அதனை விட குறைந்த விலைக்கு விற்றால் நஷ்டம் அடைய நேரிடும் என்பதால் பலா் விற்பனையை தள்ளிப்போட்டனா்.
    • ஒரு கிலோ ரூ. 13 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தில் காா்த்திகை பட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் நடவு செய்தனா். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை தீவிரமடைந்த போது சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் சரிந்தது.

    ஒரு கிலோ ரூ. 13 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. கிலோவிற்கு உற்பத்தி செலவு ரூ. 20 ஆகும் நிலையில் அதனை விட குறைந்த விலைக்கு விற்றால் நஷ்டம் அடைய நேரிடும் என்பதால் பலா் விற்பனையை தள்ளிப்போட்டனா். அறுவடை முடிந்தவுடன் விலை உயரும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் திறந்தவெளியில் பட்டறை அமைத்து இருப்பு வைத்தனா்.

    வைகாசி பட்ட நடவுக்காக கணிசமான விவசாயிகள் விதை வெங்காயம் வாங்குவதில் ஆா்வம் காட்டினா். எனவேகிலோ ரூ. 20 க்கு விலை போனது. தற்போது, வைகாசி பட்ட நடவு பணி முடியும் நிலையில் உள்ளது. இதனால் விதை வெங்காயத்திற்கான தேவை குறைந்துவிட்டது. தற்போது கா்நாடகா மாநில வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளது.ஒரு கிலோ ரூ.10க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இருப்பு வைத்தால் விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு தற்போது விலை வீழ்ச்சி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைந்துள்ளது.
    • வாரந்தோறும் ஞாயிற் றுக்கிழமை அன்று அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சிகள் வாங்குவது வழக்கம்.

    கடலூர்:

    வங்க கடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்து வருகிறது.  இந்த காலகட்டத்தில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும் என்பதால் விசைப்படகுகள் நடுக்கட லுக்கு செல்ல கூடாது என்று உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. அதன்படி மீன் பிடி தடைகாலம் ஜூன் 15-ந் தேதி முடிந்தவு டன் மறுநாளில் இருந்து கடலூரை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு களில் கடலுக்கு சென்றனர். 

    அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து விட்டு கடந்த 19-ந் தேதி கரை திரும்பினர். ஆனால், போதுமான மீன்கள் சிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் மீன் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாரந்தோறும் ஞாயிற் றுக்கிழமை அன்று அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சிகள் வாங்குவது வழக்கம். அதன்படி மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கடலூர் துறைமுகம் பகுதிக்கு சென்றனர். ஆனால், மீன்கள் வரத்து ஓரளவு இருந்தது. இருந்தாலும் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்தது. இன்று விற்பனை விலை கிேலாவில் வருமாறு:- வஞ்சரம் - ரூ.880, வவ்வால் - ரூ.600, பாறை - ரூ.350, கடல் விரால் - ரூ.600, வெள்ளை கிழங்கா - ரூ.400, நெத்திலி - ரூ.150, இறால் - ரூ.500, பண்ணி சாத்தான் - ரூ.400. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் ஆகும். 28-ந் தேதி அமாவாசை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் உள்ளதால் மீன்கள் விலை குறைந்துள்ளது என்றார்.

    ×