search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுக்கோழி"

    • பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
    • வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.

     பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான மோகனூர், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி, பரமத்தி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.500

    வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.

    இந்த வாரம் வார சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் அசைவ பிரியர்கள் வரும் தீபாவளி அன்று சமைப்பதற்கு முன்கூட்டியே வாங்கிச் சென்றதால் நாட்டுக்கோழி அனைத்தும் விற்பனையானது.

    நாட்டுக்கோழி விலை உயர்வால் நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாட்டுக்கோழி வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய அரசு உயிர்த் தொழில் நுட்பவியல் துறைத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேலூரிலுள்ள வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை, கோழி, நாட்டுக்கோழி வளர்ப்புப் பற்றிய விழிப்புணர்வு முகாம் பனைக்குளத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மேனாள் விரிவாக்கக் கல்வி இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சுதீப் குமார். வேலூரிலுள்ள வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் வேளாண் பேராசிரியர் சத்தியவேலு, திட்ட துணை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் விஜயலிங்கம் நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணையாளர்களின் தற்போதைய நிலைப்பாடும் மேம்பாட்டுக்காகக் கடைப்பிடித்திட வேண்டிய வழிமுறைகளும் என்ற தலைப்பில் தொழில் நுட்பவுரையாற்றினார். இத்திட்டத்தின் களப்பணியாளர் நவீன் நன்றி கூறினார். ராமநாதபுர மாவட்டம் பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    • பயிற்சி 15-ந் தேதி காலை 10 மணிஅளவில் நடைபெறுகிறது.
    • விவசாயிகள் பங்கேற்று நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான உள்வளாக பயிற்சி நாளை 15-ந்தேதி ( வியாழக்கிழமை ) காலை 10 மணிஅளவில் நடைபெறுகிறது.

    விவசாயிகள் இந்த பயிற்சியில் பங்கேற்று நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா். 

    • சென்னையில் கோழிக்கறி விலை சமீப காலமாக கடுமையாக உயர்ந்து வருகிறது.
    • காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கோழிக்கறி விலை சமீப காலமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிறது.

    மேலும் ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் இருந்தும், சென்னைக்கு கறிக்கோழிகள் கொண்டு வரப்படுகிறது. தற்போது கோடை வெயில் அதிகமாக கொளுத்துவதால் கறிக்கோழி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சென்னைக்கு கறிக்கோழிகள் குறைவாகவே கொண்டு வரப்படுகின்றன.

    மேலும் தற்போது மீன்பிடி காலமும் அமலில் உள்ளது. இதனால் மீன்வரத்தும் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் மீன் விலை அதிகமாக உள்ளது. சிறிய வகை மீன்களே கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது.

    மீன்தட்டுப்பாடு நிலவும் நிலையில் ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. எனவே மீன் மற்றும் ஆட்டுக்கறி வாங்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். இதனால் கடந்த 2 மாதங்களாக அசைவ பிரியர்களின் கவனம் கோழிக்கறி பக்கம் திரும்பியுள்ளது.

    இதனால் சென்னையில் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோழிக்கறி மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு கிலோ கோழிக்கறி சில்லரை விலையில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு கோழிக்கறி விலை உயரத் தொடங்கியது.

    கடந்த ஏப்ரல் மாதம் கிலோ ரூ.220 -க்கும், மே மாதம் கிலோ ரூ.240-க்கும் விற்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் கோழிக்கறி விலை ரூ.260 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று கோழிக்கறி விலை ரூ.300 ஆக அதிகரித்தது.

    மீன்பிடி தடைகாலம் இந்த வாரம் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மீன் வரத்து அதிகரிக்க தொடங்கும். மேலும் இன்னும் சில நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்பதால் கறிக்கோழி உற்பத்தியும் அதிகரிக்கும். அதன்பிறகு கோழிக்கறி மற்றும் மீன்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
    • இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி கள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்ப னைக்காக கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழி களை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர்.

    இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனை யானது. ஆனால், நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கு விற்பனை யானது. விலை உயர்ந்ததால், நாட்டுக்கோழிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வீட்டில் உள்ள தோட்டத்தில் நாட்டுக்கோழி ஒன்று முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது.
    • பள்ளி மாணவன் நிவாஸ் வீட்டில் இருந்த பொருட்களை கொண்டு தானே ஒரு இன்குபேட்டரை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். விவசாயி. இவரது மகன் நிவாஸ் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

    இவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் நாட்டுக்கோழி ஒன்று முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது. திடீரென அந்த கோழி காணாமல் போனது. இதனையடுத்து முட்டை மட்டும் தனியாக இருப்பதைக் கண்டு மாணவன் நிவாஸ் வேதனை அடைந்து அதனை குஞ்சு பொரிக்க வைப்பதற்காக சந்தையில் இன்குபேட்டரின் விலை என்ன என விசாரித்துள்ளார். அப்போது இன்குபேட்டர் விலை அதிகமாக இருந்துள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவன் நிவாஸ் வீட்டில் இருந்த பொருட்களை கொண்டு தானே ஒரு இன்குபேட்டரை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

    பின்னர் இணையத்தில் இன்குபேட்டர் தயாரிப்பது எப்படி என்பது குறித்து கண்டறிந்து, வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டு, தெர்மாகோல் அட்டை, பழைய பிஸ்கட் அட்டைப்பெட்டி மற்றும் ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களான தெர்மோஸ்டாட் பல்ப் வயர்கள் ஆகியவற்றை வைத்து இன்குபேட்டர் தயார் செய்துள்ளார். பின்னர் இதில் பொருத்தப்பட்டுள்ள தர்மா ஸ்டேட் மூலம் குறிப்பிட்ட வெப்பநிலையை தக்க வைத்துக் கொண்டு அந்த முட்டையை அடைகாப்பது போல செயற்கையாக அடைகாக்கும் எந்திரத்தை வடிவமைத்துள்ளார்.

    மேலும் அவர் தயாரித்த இன்குபேட்டரில் பொரிக்கப்பட்ட கோழி குஞ்சுகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளதாக நிவாஸ் கூறுகிறார். மேலும் இந்த செயல்முறையை வடிவமைக்க வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கடையிலிருந்து வாங்கிய ஒரு சில எலக்ட்ரானிக்கல் பொருட்கள் என ரூ.1,000 மட்டுமே செலவானதாக அவர் கூறினார்.

    நாட்டுக்கோழி முட்டையை அடைகாக்க கோழி இல்லாததால் அந்த முட்டையை வீணாக்காமல் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தானே இன்குபேட்டரை தயாரித்து அசத்திய பள்ளி மாணவன் நிவாசை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    • வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
    • கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு விற்பனைக்கு வரும் நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று 280 ரூபாய்க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதால் பொதுமக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். மேலும் வெயில் காலத்தில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டை அதிகரித்துவிடும் என்பதால், கோடைகாலத்தில் அவற்றை தவிர்க்கின்றனர்.

    ஒரு சில வியாபாரிகள், பண்ணைக் கோழிகளை நாட்டுக்கோழி என ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
    • இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் புரட்டாசி மாதம், மற்றும் மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர் மோகனூர் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழிசந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    சந்தைக்கு வீட்டில் வளர்க்கும் சிறுவிடை, பெருவிடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    நாட்டுக் கோழிகளுக்கு இப் பகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்வர். தரமான நாட்டு கோழிகள் கடந்த மாதங்களில் கிலோ ஒன்று ரூ.450 முதல் ரூ.550 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தை முன்னிட்டும், மகாளய அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு குறைந்த அளவிலே விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் நாட்டுகோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது. வாத்துக்கோழி ஒன்று ரூ.280 முதல் 300 வரையிலும் விற்பனையானது. இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மீன் சந்தையில், ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளும் வெளிச்சோடி காணப்பட்டது.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் தயாரித்தல் குறித்தும் தொடர்பு இடங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மொடக்குறிச்சி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள முகாசி அனுமன் பள்ளி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி கிருபாகரன் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் தடுப்பூசிகள் போடுவதன் அவசியம் மற்றும்

    தடுப்பூசியின் மூலம் கட்டுப்படுத்தும் நோய்கள் குறித்தும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் தயாரித்தல் குறித்தும் தொடர்பு இடங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு துறையின் திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.

    தொழில்நுட்ப மேலாளர்கள் விஜயகுமார், மஞ்சுரேகா, நவீன பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர்.

    ×