search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டுக்கோழி வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    நாட்டுக்கோழி வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்

    • நாட்டுக்கோழி வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய அரசு உயிர்த் தொழில் நுட்பவியல் துறைத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேலூரிலுள்ள வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை, கோழி, நாட்டுக்கோழி வளர்ப்புப் பற்றிய விழிப்புணர்வு முகாம் பனைக்குளத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மேனாள் விரிவாக்கக் கல்வி இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சுதீப் குமார். வேலூரிலுள்ள வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் வேளாண் பேராசிரியர் சத்தியவேலு, திட்ட துணை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் விஜயலிங்கம் நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணையாளர்களின் தற்போதைய நிலைப்பாடும் மேம்பாட்டுக்காகக் கடைப்பிடித்திட வேண்டிய வழிமுறைகளும் என்ற தலைப்பில் தொழில் நுட்பவுரையாற்றினார். இத்திட்டத்தின் களப்பணியாளர் நவீன் நன்றி கூறினார். ராமநாதபுர மாவட்டம் பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    Next Story
    ×