search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Incubator egg"

    • வீட்டில் உள்ள தோட்டத்தில் நாட்டுக்கோழி ஒன்று முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது.
    • பள்ளி மாணவன் நிவாஸ் வீட்டில் இருந்த பொருட்களை கொண்டு தானே ஒரு இன்குபேட்டரை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். விவசாயி. இவரது மகன் நிவாஸ் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

    இவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் நாட்டுக்கோழி ஒன்று முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது. திடீரென அந்த கோழி காணாமல் போனது. இதனையடுத்து முட்டை மட்டும் தனியாக இருப்பதைக் கண்டு மாணவன் நிவாஸ் வேதனை அடைந்து அதனை குஞ்சு பொரிக்க வைப்பதற்காக சந்தையில் இன்குபேட்டரின் விலை என்ன என விசாரித்துள்ளார். அப்போது இன்குபேட்டர் விலை அதிகமாக இருந்துள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவன் நிவாஸ் வீட்டில் இருந்த பொருட்களை கொண்டு தானே ஒரு இன்குபேட்டரை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

    பின்னர் இணையத்தில் இன்குபேட்டர் தயாரிப்பது எப்படி என்பது குறித்து கண்டறிந்து, வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டு, தெர்மாகோல் அட்டை, பழைய பிஸ்கட் அட்டைப்பெட்டி மற்றும் ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களான தெர்மோஸ்டாட் பல்ப் வயர்கள் ஆகியவற்றை வைத்து இன்குபேட்டர் தயார் செய்துள்ளார். பின்னர் இதில் பொருத்தப்பட்டுள்ள தர்மா ஸ்டேட் மூலம் குறிப்பிட்ட வெப்பநிலையை தக்க வைத்துக் கொண்டு அந்த முட்டையை அடைகாப்பது போல செயற்கையாக அடைகாக்கும் எந்திரத்தை வடிவமைத்துள்ளார்.

    மேலும் அவர் தயாரித்த இன்குபேட்டரில் பொரிக்கப்பட்ட கோழி குஞ்சுகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளதாக நிவாஸ் கூறுகிறார். மேலும் இந்த செயல்முறையை வடிவமைக்க வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கடையிலிருந்து வாங்கிய ஒரு சில எலக்ட்ரானிக்கல் பொருட்கள் என ரூ.1,000 மட்டுமே செலவானதாக அவர் கூறினார்.

    நாட்டுக்கோழி முட்டையை அடைகாக்க கோழி இல்லாததால் அந்த முட்டையை வீணாக்காமல் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தானே இன்குபேட்டரை தயாரித்து அசத்திய பள்ளி மாணவன் நிவாசை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    ×