search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள் ளியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் உள்பட 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.

    அங்கு அவர்கள் வழி பாடு நடத்திவிட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் அதே சரக்கு வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். சீராப்பள்ளி யைச் சேர்ந்த தர்மலிங்கம் (வயது 50) சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார். ராசிபுரம்-நாம கிரிப்பேட்டை சாலையில் சீராப்பள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டி ருந்த போது திடீரென்று ஸ்டேரிங் லாக் ஆகிவிட்ட தாக கூறப்ப டுகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அப்போது கூச்ச லிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து காயம் பட்ட வர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசி புரம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 14 பெண்கள் உட்பட 22 பேர் காயம் அடைந்தனர். இவர்க ளில் 17 பேர் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:-

    வனிதா (26), ராமாயி (65), பாப்பு (48), சரஸ்வதி (22), கல்பனா (46), அத்தாயி (70), லட்சுமி (58), சின்ன பொன்னு (65), ஜெயம்மாள் (44), ருகமணி(40), இளைய நிலா (13), பரிமளா (45), சிவா(13), தங்கமணி (48), இளங்கோ (45), தஸ்வின் (10), கோல் வேந்தன் (3) இவர்கள் அனைவரும் தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விசாரணை

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த நந்தகுமார் (17), கவிதா (36), பவுன் (55), சிவகாமி (55), ஆதித்தன் (8) உள்பட 5 பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் பவுன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி னார். டிரைவர் தர்ம லிங்கம் காயம் இன்றி தப்பிய தாக கூறப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்த வர்கள் அனைவரும் சீராப் பள்ளியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து குறித்து நாம கிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • வாகனங்களில் செல்பவர்கள் போதுமான மின் வெளிச்சமின்றி விபத்து ஏற்படுகிறது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் மூவர் ரோடு பகுதியில் தஞ்சை பட்டுக்கோட்டை ஒரத்தநாடு புதுக்கோட்டை கரம்பக்குடி ஆகிய பிரிவு சாலைகளை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளது சாலையின் ஓரமாக நிறுவப்பட்டுள்ள உயர்மின் மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் கிடப்பதை சீரமைக்காமல் உள்ளதால் இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் போதுமான மின் வெளிச்சமின்றி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது . மிகப்பெரிய விபத்தை தடுப்பதற்கு முன்பு திருவோணம் ஊராட்சி ஒன்றியம் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உயர் மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய குப்பை அள்ளும் வாகனங்களை தலைவர் தொடங்கி வைத்தார்.
    • மக்கும்-மக்காத குப்பைகள் தனித்தனியே பிரித்து வாங்கப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் 27 வார்டுகளில் சேகரிக் கப்படும் குப்பைகள் வீடு வீடாக சென்று மக்கும் -மக்காத குப்பைகள் தனித்தனியே பிரித்து வாங்கப்படுகிறது. அவை குப்பை கிடங்கில் கொட்டப் பட்டு வருகின்றன.

    இது தவிர தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், ெரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் குப்பைகளை சேகரிப்ப தற்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு சேகரிக் கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக நவீன குப்பை அள்ளும் 3 வாகனங் கள் திருமங்கலம் நகராட்சி சார்பில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட் டன.

    இந்த வாகனங்களை நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் நித்யா 3 புதிய வாகனத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்த னர்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர் கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின் திரவியம், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், சுகா தார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிவேகமே சாலை விபத்தில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
    • அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் சென்னை தெற்கு சரக இணை ஆணையர் முத்து ஆகியோரின் உத்தரவின் படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த 31 வாகனங்களை கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வாகனங்களுக்கு ரூ.59 ஆயிரம் அபராதம் விதித்து இதுபோன்று மீண்டும் அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறுகையில்:-

    அதிவேகமே சாலை விபத்தில் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது, சாலைகளில் பக்கவாட்டில் வட்டமாக பொருத்தப்பட்டிருக்கும் போக்குவரத்து சின்னத்தில் குறிப்பிடப்பட்ட வேக அளவில்தான் அந்தந்த பகுதியில் செல்லவேண்டும் என்றும் விளக்கமளித்தார்.

    மேலும் தணிக்கையின் போது பெரும்பாலான டிரைவர்கள் தாங்கள் சரியான வேகத்தில் தான் வந்தோம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் ரேடாரின் வேக புகைப்படத்தை பார்த்த பின்னர்தான் தம் தவறை உணர்ந்து, இனி இவ்வாறு செய்யமாட்டோம் என்று உறுதி எடுத்து சென்றார்கள் என்றார்.

    • மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
    • பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம்- கறம்பக்குடி சாலை மற்றும் தஞ்சை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென அந்த பேனர் சரிந்து கீழே சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகனம் மோதி பேக்கரி கடை ஊழியர் பலியானார்.
    • 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி அருகேயுள்ள தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 58). இவர் கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கூத்தியார்குண்டை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் ராம்குமார் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • 2 கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.
    • ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர மோட்டார் வாகனங்களை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஒரு கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்வழங்க வேண்டும் டி .கே .ஜி. நீலமேகம் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

    இந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக ஒரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனம் வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து இன்று தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, சரவணன் ஆகிய இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி, தி.மு.க. பகுதி செயலாளர் சதாசிவம், மண்டல குழு தலைவர் கலையரசன், பகுதி துணை செயலாளர் வினோத், வட்டக் கழக நிர்வாகிகள் செழியன், கிள்ளிவளவன் , ராஜேஷ், மகாலிங்கம், அரசு, சிவக்குமார், பாலாஜி, வினோத், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் தொழிலாளி மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவா (வயது 56). கூலி தொழிலாளி.

    இவர் தினமும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து கிளம்பி கிழக்கு கடற்கரை சாலை வழியாக செம்படவன்காடு ரவுண்டா அருகே உள்ள டீ கடைக்கு நடந்து சென்று டீ குடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    அதேபோல், இன்றும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து புறப்பட்டு கடையில் டீ குடித்துள்ளார். பின்னர், கடையில் இருந்து திரும்பி வரும் வழியில் செம்படவன்காடு கோவில் ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், தொழிலாளி மீது மோதிச்சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மாணவர்கள் கல்லூரி சீருடையில் வந்தனர்.
    • ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க போலீ சார் பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் தினமும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், வேப்பமூடு, வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. நேற்று மாலை நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மாணவர்கள் கல்லூரி சீருடையில் வந்தனர்.

    அவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு லைசென்ஸ் இல்லாதது தெரியவந்தது. ஹெல்மெட்டும் அணியாமல் அவர் வந்ததையடுத்து ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் லைசென்சு இல்லாமல் வந்த பலரும் சிக்கினார்கள். 12 பேர் நேற்று ஒரே நாளில் லை சென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ.6ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது டன் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆட்டோக்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பிட்ட அளவைவிட அதிக மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கிறார்களா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. அதிக குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதிக மாணவ-மாணவி களை ஏற்றி சென்றதாக 40 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் புறநகர் பகுதிகளிலும் போலீசார் ஹெல்மெட் சோதனை நடத்தி வருகிறார்கள். கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வருபவர்க ளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    • பாலம் கட்டும் பகுதியில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை.
    • இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை- கீழத்தோட்டம் சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பணிகள் நடைபெறுவதால் பாலம் கட்டும் பகுதியில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பல இடங்களுக்கு சென்று சேகரிக்கின்றனர்.
    • எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடைவீதி, ரயில் நிலைய த்திற்கு செல்லும் சாலை உள்ளது.

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் எதிர்ப்புறம் மற்றும் பயணியர் விடுதி, சார் பதிவாளர் அலுவலகம் நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் காவல் நிலையம், ரயில் நிலையம் எதிர்புறம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    மேலும் கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் தினந்தோறும் குப்பைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.

    குவிந்து வரும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பல இடங்களுக்குச் சென்று சேகரிக்கின்றனர்.

    இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே சாலையோரம் கொட்டப்ப டும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

    இவ்வாறு சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படும் போது அதிக அளவில் புகை சாலை முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

    எனவே ஊராட்சி நிர்வாகம் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதை நிறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தப்பி செல்ல முயன்ற வரை போலீசார் தடுத்து நிறுத்தினர்
    • 2 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகளை ஏற்றி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் செல்லச்சாமி தலைமை யிலான போலீசார் இன்று காலை கேப் ரோடு மற்றும் ராமன்புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதிக மாணவிகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 2 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு ஆட்டோ 2-வது முறையாக சிக்கியது தெரியவந்தது. அந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப் பட்டது. ஹெல்மெட் அணி யாமல் வந்த வாலிபர்களை யும் தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர். செல்போன் பேசிக்கொண்டு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். போலீசை பார்த்த தும் அவர் தப்பி செல்ல முயன்றார். போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தனர். ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000, செல்போனில் பேசியதற்கு ரூ.1000 என ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், செல்போன் பேசி விட்டு வாகனம் ஓட்டினால் முதல் முறை என்பதால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2-வது முறை சிக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது உயிருக்கு ஆபத்தானதாகும். எனவே அரசின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    ×