பழுதான உயர்மின் கோபுர விளக்கு ஒளிருமா?

இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர். வாகனங்களில் செல்பவர்கள் போதுமான மின் வெளிச்சமின்றி விபத்து ஏற்படுகிறது.
பழுதான நிலையில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு.
பழுதான நிலையில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு.
Published on

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் மூவர் ரோடு பகுதியில் தஞ்சை பட்டுக்கோட்டை ஒரத்தநாடு புதுக்கோட்டை கரம்பக்குடி ஆகிய பிரிவு சாலைகளை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளது சாலையின் ஓரமாக நிறுவப்பட்டுள்ள உயர்மின் மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் கிடப்பதை சீரமைக்காமல் உள்ளதால் இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் போதுமான மின் வெளிச்சமின்றி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது . மிகப்பெரிய விபத்தை தடுப்பதற்கு முன்பு திருவோணம் ஊராட்சி ஒன்றியம் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உயர் மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com