என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி பேக்கரி கடை ஊழியர் பலி
- வாகனம் மோதி பேக்கரி கடை ஊழியர் பலியானார்.
- 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்.
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி அருகேயுள்ள தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 58). இவர் கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கூத்தியார்குண்டை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் ராம்குமார் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






