search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா"

    • திருப்பதி மாவட்டம் புத்தூர் அடுத்த பொன்ராஜ் குப்பம் கிராமத்திற்கு சென்றார்.
    • ரோஜா கிராம மக்களிடையே நெருங்கி பழகி அரசின் நல திட்டங்கள் குறித்து வீடு வீடாக விளக்கம் அளித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மந்திரி ரோஜா. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

    இதனால் ரோஜா அரசின் நல திட்டங்கள் குறித்து தனது தொகுதி முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று திருப்பதி மாவட்டம் புத்தூர் அடுத்த பொன்ராஜ் குப்பம் கிராமத்திற்கு சென்றார்.

    ரோஜா கிராம மக்களிடையே நெருங்கி பழகி அரசின் நல திட்டங்கள் குறித்து வீடு வீடாக விளக்கம் அளித்தார்.

    பின்னர் அங்குள்ள அரசு பள்ளியில் கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்கி இருந்தார்.

    • உண்மை வெற்றி அடைந்தால் சிறையில் சந்திரபாபு நாயுடு நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
    • ஆந்திராவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஒன்ஸ்மோர் ஜெகன் என்ற முடிவை மக்கள் கொடுப்பார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மந்திரி ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

    உண்மை வெற்றியடைய வேண்டும் என்று கோவிலில் வேண்டிக்கொண்டதாக சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி கூறியிருக்கிறார்.

    உண்மை வெற்றி அடைந்தால் சிறையில் சந்திரபாபு நாயுடு நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    புவனேஸ்வரியும் சிறை செல்ல நேரிடும். ஆந்திராவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஒன்ஸ்மோர் ஜெகன் என்ற முடிவை மக்கள் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.
    • மந்திரி ரோஜாவின் பேச்சுக்கு பூம்பூம் மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.

    மந்திரி ரோஜாவின் இந்த பேச்சுக்கு பூம்பூம்மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.

    அதன் சங்க மாநில தலைவர் தாசரி சத்தியம் மற்றும் தாசரி ஸ்ரீனு, முங்கி வெங்கடேஸ்வரராவ், தாசரி சின்னா, ராம்பாபு ஆகியோர் நந்தி கம போலீசில் மந்திரி ரோஜா மீது புகார் அளித்தனர்.

    அதில் எங்கள் குலத்தொழிலையும், எங்கள் சாதியை பற்றி இழிவாக பேசிய மந்திரி ரோஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இருந்தனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் நடிகை ரோஜா முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது ஆளும் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

    செம்பருத்தி படத்தில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு அவர் உறுதுணையாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை.

    இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார்.

    ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார்.

    ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டுமானால் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வரவேண்டும் என்றார்.

    இதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது.
    • பண்டாரு சத்யநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அமைச்சர் ரோஜா குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சிடிக்கள் காட்டப்பட்டன. ஆனால் சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை.

    பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது. (கண்ணீர் விட்டு கதறி அழுதார்).

    உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா?

    முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் கண்டிக்காதது ஏன்?

    தெலுங்கு தேசம் ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சுக்கு அவரது மனைவி தன் கணவனை அறைந்திருக்க வேண்டும்.

    லோகேஷ் வெட்கமின்றி ட்வீட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை பிரசாரத்திற்கு அழைத்தது ஏன்? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்? என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள்.

    நான் உங்கள் கட்சியில் இருக்கும்போது எப்படி நல்லவராகவும், வேறு கட்சியில் இருக்கும்போது கெட்டவராகவும் இருக்க முடியும்.

    பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது. கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா. சந்திரபாபு நாயுடுவை கைது செய்தால் ஏன் அழுகிறீர்கள்.

    தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. தெலுங்கு தேசம் கட்சியால் அரசியல் ரீதியாக வளர முடியாது.

    பண்டாரு சத்யநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் ரோஜா பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் பெண் அமைச்சர் ஒருவர் கலங்கி அழுதபடி பேட்டி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ரோஜா குறித்து அவதூறு பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து பண்டாரு சத்திய நாராயண மூர்த்தியை கைது செய்தனர்.

    • தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
    • 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி மீசையை முறுக்கி சந்திரபாபு நாயுடுவை சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாக பேசினார்.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது சட்டசபைக்கு வந்த அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நீங்கள் 23 பேர் மட்டுமே. நாங்கள் 151 பேர். எங்களை சட்டப் பேரவையில் மதிக்கவில்லை என்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

    நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் சட்டசபை, சபாநாயகர் மற்றும் சட்டங்களை மதிக்கிறோம்.

    தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.

    சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததற்கான உறுதியான ஆதாரங்களை சி.ஐ.டி. கண்டுபிடித்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம். 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை. பெண்களை இழிவாக பேசுவது அவரது வழக்கம்.

    மைத்துனர் சந்திரபாபு நாயுடுவை காப்பாற்ற சட்டமன்றத்தில் சத்தமாக கூச்சலிட்டபடி அழுகிறார். சந்திரபாபு நாயுடுவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக சித்தரிக்க பார்க்கின்றனர்.

    சந்திரபாபு நாயுடு மீது சட்ட விரோத வழக்கு இருந்தால் விவாதம் நடத்த வேண்டும்.

    சட்டசபையில் முறைபடி விவாதம் நடத்தப்பட வேண்டும். அதை விடுத்து சைக்கோக்கள் போல் கத்தி சபாநாயகர் மீது பாட்டில் வீசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை.
    • பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது.

    ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கு ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தனித்துவ குணம் கொண்ட சில ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு..

    பீச் வண்ண ரோஸ்:

    மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களின் கலவையை பிரதிபலிக்கும் பீச் வண்ண ரோஜாக்கள் நன்றியுணர்வை குறிக்கின்றன. அடக்கம், அனுதாபம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    மஞ்சள்:

    மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான அன்பையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்த இவை சிறந்த தேர்வாக அமைகின்றன.

    ஆரஞ்சு:

    ஆரஞ்சு நிற ரோஜாக்கள் உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சியை குறிக்கின்றன. ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அவை பகிரப்படுகின்றன.

    வெள்ளை:

    வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய தொடக்கங்களை குறிக்கின்றன. தம்பதியினரிடையே நிலவும் தூய அன்பை குறிக்க திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    இளஞ்சிவப்பு:

    இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றன. வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றன. அதே சமயம் அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிப்பிடுகின்றன.

    நீலம்:

    நீல நிற ரோஜாக்கள் மர்மம், சாத்தியமில்லாதது போன்ற உணர்வை குறிக்கின்றன.

    சிவப்பு:

    இது காதலின் அடையாள சின்னமாக விளங்குகிறது. இரு மனங்களுக்கு இடையே புதைந்திருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், காதல், அன்பு, ஆசையின் வெளிப்பாட்டை பகிரவும் உதவும் தூதுவனாக பயன்படுகிறது, சிவப்பு ரோஜா.

    • சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினியின் கருத்துக்கு ஆந்திர மந்திரியும், நடிகையுமான ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • மக்கள் நலனுக்கு சிறை சென்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சரியாக இருக்கும்.

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடந்த 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் திட்டப் பணிகளில் 371 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு மீது 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த சி.ஐ.டி. போலீசார் கடந்த 9-ந் தேதியன்று சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜ மகேந்திரவரம் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஆந்திராவில் பதட்டம் நிலவியது.

    இதைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதுபோல சந்திரபாபு நாயுடுவும் தனக்கு ஜாமின் வழங்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதுகுறித்து நீதிமன்றம் வருகிற 19-ந்தேதி விசாரணை நடத்த உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷை தொலைபேசி யில் தொடர்பு கண்டு பேசினார்.

    அவரிடம் ரஜினி பேசும் போது, 'எனது நண்பர் சந்திரபாபு நாயுடு மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் சிறந்த போராளி. இந்த பொய் வழக்குகளும் சட்ட விரோத கைதுகளும் அவரை ஒன்றும் செய்யாது. நீங்கள் தைரியமாக இருங்கள். எனது அருமை நண்பர் தவறு செய்திருக்க மாட்டார். அவரது நற்செயல்களும் தன்னலம் அற்ற பொது சேவையும் அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினியின் கருத்துக்கு ஆந்திர மந்திரியும், நடிகையுமான ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் ரஜினியின் மரியாதைதான் குறையும்.

    மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என எண்ணியதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. மக்கள் நலனுக்கு சிறை சென்றவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சரியாக இருக்கும்.

    ஆனால் திருடர்களுக்கு ரஜினி ஏன் ஆதரவு தெரிவிக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரபாபு நாயுடு நல்லவர் என்று அவர் சொன்னால் மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். ரஜினி ஒரு புத்திசாலி. ஆனால் மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம்? இதன் மூலம் மக்களுக்கு அவர் என்ன செய்தி சொல்ல வருகிறார். என்.டி.ஆர். நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியதற்கு ஆந்திராவில் எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது என சரமாரியாக ரஜினியை கண்டித்து ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த சம்பவம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் சினிமா துறையில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒற்றை யானை கணவன், மனைவியை மிதித்து கொன்றது.
    • விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர்.

    சித்தூர்:

    சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). விவசாயி. இவரது மனைவி செல்வி.

    இவர்களுக்கு வனப்பகுதியொட்டி சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இன்று காலை வெங்கடேசும், செல்வியும் விவசாய பணியில் ஈடுபட நிலத்திற்கு சென்றனர்.

    அப்போது விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை வந்தது. இதனைக் கண்டவுடன் கணவன், மனைவி கூச்சலிட்டபடி அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

    அவர்களை விடாமல் துரத்தி சென்று ஒற்றை யானை கணவன், மனைவியை மிதித்து கொன்றது.

    இது குறித்து சித்தூர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷ், செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    யானை மிதித்து கணவன், மனைவி இறந்த தகவல் அறிந்து அமைச்சர் ரோஜா சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளதால் அடிக்கடி விவசாய நிலத்திற்கு யானைகள் வந்து நிலங்களை சேதப்படுத்துகிறது.

    விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ருஷிகொண்டா விவகாரத்தில் பவன் கல்யாண் தொடர்ந்து ‘பொய்களை’ உமிழ்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது.
    • கோழி மற்றும் காளை கதைகளை சொல்வதில் பவன் கல்யாண் கில்லாடி.

    திருப்பதி:

    ஆந்திர மாநில ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் வருகிற தேர்தலில் அழுத்தமாகத் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

    கடந்த சில காலமாகவே அவர் தொடர்ச்சியாக அரசியல் சார்ந்து புயலைக் கிளப்பி வருகிறார்.

    நேற்று முன்தினம் பவன் கல்யாண் ருஷி கொண்டா சென்றிருந்தார். அங்குச் செல்ல அவருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி அங்குச் சென்ற பவன் கல்யாண் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்தார்.

    ருஷிகொண்டாவில் பெரிய விதிமீறல்கள் அரங்கேறுகிறது. இங்கு ஜெகன் மோகன் ரெட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் என குற்றம்சாட்டினார்.

    இதற்கு அமைச்சர் ரோஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ருஷிகொண்டா விவகாரத்தில் பவன் கல்யாண் தொடர்ந்து 'பொய்களை' உமிழ்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது. அந்த நிலம் சுற்றுலாத் துறைக்கு சொந்தமானது.

    அரசு தனது நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு என்ன ஆட்சேபனை என்று எனக்கு புரியவில்லை.

    அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    கோழி மற்றும் காளை கதைகளை சொல்வதில் பவன் கல்யாண் கில்லாடி.

    அவருக்கு யாரும் சமமாக முடியாது. சந்திரபாபு நாயுடுவுக்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கிறார். பவன் கல்யாண் அரசு நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதை வீடியோ எடுத்துள்ளார்.

    அவர் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பதவி ஏற்பு விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் முடித்து கோவிலிலிருந்து வெளியே வந்தார்.
    • திருப்பதி கோவிலில் நேற்று 57, 443 பேர் தரிசனம் செய்தனர். 28,198 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்.எல்.ஏ பூமண கருணாகரன் ரெட்டி செய்யப்பட்டார். நேற்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண கருணாகரன் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பதவி ஏற்பு விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் முடித்து கோவிலிலிருந்து வெளியே வந்தார்.

    அப்போது வெளியே நின்று கொண்டு இருந்த 2 வயதான பெண்கள் அமைச்சர் ரோஜாவுக்கு பூ, வெற்றிலை பாக்கு, பழங்களை வழங்கினர்.

    பின்னர் திடீரென அமைச்சர் ரோஜா காலில் விழுந்து அவரது கால்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கினர். இந்த சம்பவத்தை கண்ட பக்தர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். வயதில் மூத்த பெண்கள் இருவர் அமைச்சர் ரோஜா காலில் விழுந்து வணங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி கோவிலில் நேற்று 57, 443 பேர் தரிசனம் செய்தனர். 28,198 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்றதால் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • 90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன்.
    • இவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சந்தித்துள்ளனர்.

    90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன். இவர்களின் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இருவரும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். இவர்கள் இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்தது.




    இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோஜா இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ரோஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, நல்ல நண்பர்கள் நட்சத்திரம் போல. இன்னும் எனக்கு நினைவிருக்கிறது, நாம் சந்தித்தது சிரித்தது எல்லாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    ×