நல்ல நண்பர்கள் நட்சத்திரம் போல.. ரோஜாவை சந்தித்து கட்டியணைத்த ரம்யா கிருஷ்ணன்

90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன்.இவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சந்தித்துள்ளனர்.
நல்ல நண்பர்கள் நட்சத்திரம் போல.. ரோஜாவை சந்தித்து கட்டியணைத்த ரம்யா கிருஷ்ணன்
Published on

90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன். இவர்களின் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இருவரும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். இவர்கள் இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோஜா இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ரோஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, நல்ல நண்பர்கள் நட்சத்திரம் போல. இன்னும் எனக்கு நினைவிருக்கிறது, நாம் சந்தித்தது சிரித்தது எல்லாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com