search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷப் பண்ட்"

    • ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார்

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும். இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.

    17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஐபிஎல் சீசனில் உறுதியாக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறினார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா? அணியை வழிநடந்துவரா என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரம்ப காலங்களில் டோனியுடன் தம்மை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்ததால் பலமுறை அறைக்குள் சென்று அழுததாக ரிசப் பண்ட் கூறினார்.
    • இளம் வீரர் மீது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்? ஒப்பிட வேண்டும் என பண்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் டெல்லியை சேர்ந்தவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இவர் டோனிக்கு அடுத்தப்படியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டோனியை மிஞ்சும் அளவுக்கு அசத்திய ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார். அதே போல 2021 காபா போன்ற சில மறக்க முடியாத வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார். டோனி ஓய்வு அறிவித்த பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பண்ட் செயல்பட்டார்.

    இந்நிலையில் ஆரம்ப காலங்களில் டோனியுடன் தம்மை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்ததால் பலமுறை அறைக்குள் சென்று அழுததாக ரிசப் பண்ட் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் ஏன் கேள்விகள் எழுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அணிக்குள் நுழைந்ததும் என்னை டோனியின் மாற்றாக இருப்பார் என்று அனைவரும் பேசினார்கள்.

    ஆனால் இளம் வீரர் மீது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்? ஒப்பிட வேண்டும்? 500 போட்டிகளில் விளையாடிய ஒருவருடன் 5 போட்டியில் விளையாடிய ஒருவரை ஒப்பிடக்கூடாது. அந்த வகையில் என்னுடைய பெரிய பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருந்தது. அதில் மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டது மோசமான உணர்வை கொடுத்தது.

    அதனால் 20 - 21 வயதிலேயே மனதளவில் மூச்சு விட முடியாத அளவுக்கு அழுத்தத்தை சந்தித்தேன். அறைக்குள் சென்று அழுவேன். மொஹாலியில் ஸ்டம்ப்பிங்கை நான் தவற விட்ட போது ரசிகர்கள் டோனி டோனி என்று முழங்கினர். இருப்பினும் டோனியுடனான என்னுடைய உறவை விவரிப்பது கடினமாகும். அவருடன் நான் எப்போதும் சுதந்திரமாக பேசி மற்றவர்களுடன் விவாதிக்காததை கூட விவாதிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரிஷப் பண்ட் சொல்வது போல 500 போட்டிகள் விளையாடியவருடன் எப்படி ஒப்பிட முடியும். டோனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய முதல் சில போட்டிகளில் நிறைய கேட்ச் மிஸ், ஸ்டெம்பிங் மிஸ் செய்துள்ளார். ஒரு கேட்ச் மிஸ் செய்யும் போது நெஹ்ரா கூட டோனியை திட்டியுள்ளார். அந்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதேபோல கேஎல் ராகுல் கீப்பிங் செய்யும் போது கூட கேட்ச் மிஸ் செய்தால் உடனே ரசிகர்கள் டோனி டோனி என கூச்சளிடுவது நடந்திருக்கிறது. புதிதாக அணிக்கு வரும் ஒவ்வொருவரும் பதட்டத்துடன் தான் விளையாடுவார்கள். இதுபோன்ற பிரச்சனை இருப்பது வழக்கம்தான். ஆனால் இதை வைத்து கொண்டு மற்றவருடன் ஒப்பிடுவது சரியாகாது.

    • இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் டி20 போட்டி பெங்களூருவின் நாளை நடக்கிறது.
    • பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மோதுகிறது. இதில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது.

    இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ரிஷப் பண்ட் இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். அவர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் ஆகியோருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓராண்டுக்கும் மேலாக விலகி உள்ளார். ஆனாலும் அவர் அடிக்கடி இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் மைதானத்திற்கு வந்து சக வீரர்களுடன் பேசி மகிழ்வார். அந்த வகையில் இப்போது இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்துள்ளார். 

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    • இன்று நடைபெறும் ஏலத்தில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரிஷப் பண்ட். இவர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதனால் கடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். தற்போது காயத்தில் இருந்து ஏறக்குறைய குணம் அடைந்துவிட்டார். இதனால் வருகிற ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதற்கு ஏற்றபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்று மதியம் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட் கலந்து கொள்ள இருக்கிறார்.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் ரிஷப் பண்ட்-யிடம் உடல் தகுதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பது புதிய அனுபவம். மேலும் உற்சாகமாக உள்ளது. இதற்கு முன்னதாக ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    சில மாதங்களுக்கு முன்னதாக நான் செய்து கொண்டிருந்ததை விட (கிரிக்கெட் பயிற்சி) தற்போது சிறந்த வகையில் செய்து கொண்டிருக்கிறேன். 100 சதவீதத்திற்கு இன்னும் உடற்தகுதி பெற வேண்டியுள்ளது. ஆனால் இன்றும் சில மாதங்கள் உள்ளது. அதற்குள் நான் முழு உடற்தகுதியை எட்டி விடுவேன்" என்றார்.

    • 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
    • தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து, கிரிக்கெட்டிற்கு திரும்ப முழு தகுதி பெற்றுள்ளார்

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவர் கடந்த ஆண்டு ஐ.பி.எல். மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

    விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவர் முழு உடல் தகுதி பெற்றார். ஆனாலும் அவர் உடனடியாக கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கேப்டனாக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி கேப்டன் பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

    ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படுவாரா? என்று உறுதியாக தெரியவில்லை. ரிஷப் பண்ட் விளையாடும் பட்சத்தில் டெல்லி அணி பேட்டிங்கில் பலம்பெறும். அவர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

    ஏலப் பட்டியலில் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். இங்கிலாந்தில் இருந்து அதிகபட்சமாக 25 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். அசோசியேட் நாடுகளான நமீபியாவில் இருந்து டேவிட் வைஸ், நெதர்லாந்தில் இருந்து மீக்கெரன் ஆகியோரும் ஏலப்பட்டியலில் உள்ளனர்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட், ஸ்டார்க் மற்றும் ரவீந்திரா ஆகியோர் மீது ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

    • தீபாவளி பண்டிகையை ரிஷப் பண்ட், மகேந்திர சிங் டோனி குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.
    • ரிஷப் பண்ட், டோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனி குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.

    டோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை வென்று கொடுத்துள்ளார். ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிஷப் பண்ட், டோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • தீவிர சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். ஆனால் தீவிர பயிற்சி மேற்கொள்ளவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் அவர் முக்கிய போட்டி தொடர்களில் விளையாடவில்லை. இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ளார். இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்கு ரிஷப் பண்ட் சென்றார். அவர் மற்ற வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை.

    இந்த நிலையில் டெல்லி அணியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி கூறும்போது, "ரிஷப் பண்ட் நல்ல நிலையில் இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் விளையாடுவார். தற்போது அவர் பயிற்சி செய்யமாட்டார். வீரர்கள் ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு டெல்லி அணியில் கேப்டனாக ரிஷப் பண்ட் இருப்பதால் அவருடன் அணியை பற்றி விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் படேல் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

    • பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது.
    • பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார். பந்த் அணி வீரர்களுடன் மீண்டும் இணைவதையும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் தொடர்புகொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
    • ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. மேலும் வருகிற ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்.

    ரிஷப் பண்ட் அவரது உடல் நலம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.

    இந்நிலையில் தற்போது அவர் எக்சர் சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இனி நல்லதே நடக்கும் என தலைப்பிட்டிருந்தார். மிஸ் யூ ரிஷப் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • அழுத்தமான பெரிய போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் ஆவர்.
    • இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்படும் விராட் கோலியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

    டி20 போட்டிகள் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அதன் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்து வருவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அழிவின் விளிம்பில் சென்ற அதற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக்கோப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியதால் தற்போது டெஸ்ட் போட்டிகள் டி20 கிரிக்கெட் போல த்ரில்லாக நடைபெறுகிறது.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய கேம் சேஞ்சர்ஸ் பென் ஸ்டோக்ஸ், ஜடாஜா, ரிஷப் பண்ட், ஸ்மித், நாதன் லயன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

    மேலும் கூறியதாவது:- அழுத்தமான பெரிய போட்டிகளில் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் ஆகியோர் ஆவர். மேலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெளிநாட்டு மண்ணின் சதங்களை அடித்து காபா போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிசப் பண்ட் ஆகிய இந்திய வீரர்களை பெயரிட்டுள்ளார்.

    அதே போல சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் அசத்தலாக செயல்பட்டு சுமார் 500 விக்கெட்களை எடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய வீரராக சமீபத்தில் சாதனை படைத்த நேதன் லையனையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9000-க்கு மேற்பட்ட ரன்களை அடித்து ஜாம்பவானாக அசத்தி வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை மேட்ச் வின்னர்களாக தேர்வு செய்துள்ளார்.

    இருப்பினும் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து மேட்ச் வின்னராக போற்றப்படும் விராட் கோலியை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×