search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஸ்டெம்பிங் மிஸ்.. டோனி டோனி என கூச்சலிட்ட ரசிகர்கள்.. நிறைய நாள் அழுதேன்.. பண்ட் உருக்கம்
    X

    ஸ்டெம்பிங் மிஸ்.. டோனி டோனி என கூச்சலிட்ட ரசிகர்கள்.. நிறைய நாள் அழுதேன்.. பண்ட் உருக்கம்

    • ஆரம்ப காலங்களில் டோனியுடன் தம்மை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்ததால் பலமுறை அறைக்குள் சென்று அழுததாக ரிசப் பண்ட் கூறினார்.
    • இளம் வீரர் மீது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்? ஒப்பிட வேண்டும் என பண்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் டெல்லியை சேர்ந்தவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இவர் டோனிக்கு அடுத்தப்படியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டோனியை மிஞ்சும் அளவுக்கு அசத்திய ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார். அதே போல 2021 காபா போன்ற சில மறக்க முடியாத வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார். டோனி ஓய்வு அறிவித்த பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பண்ட் செயல்பட்டார்.

    இந்நிலையில் ஆரம்ப காலங்களில் டோனியுடன் தம்மை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்ததால் பலமுறை அறைக்குள் சென்று அழுததாக ரிசப் பண்ட் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் ஏன் கேள்விகள் எழுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அணிக்குள் நுழைந்ததும் என்னை டோனியின் மாற்றாக இருப்பார் என்று அனைவரும் பேசினார்கள்.

    ஆனால் இளம் வீரர் மீது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்? ஒப்பிட வேண்டும்? 500 போட்டிகளில் விளையாடிய ஒருவருடன் 5 போட்டியில் விளையாடிய ஒருவரை ஒப்பிடக்கூடாது. அந்த வகையில் என்னுடைய பெரிய பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருந்தது. அதில் மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டது மோசமான உணர்வை கொடுத்தது.

    அதனால் 20 - 21 வயதிலேயே மனதளவில் மூச்சு விட முடியாத அளவுக்கு அழுத்தத்தை சந்தித்தேன். அறைக்குள் சென்று அழுவேன். மொஹாலியில் ஸ்டம்ப்பிங்கை நான் தவற விட்ட போது ரசிகர்கள் டோனி டோனி என்று முழங்கினர். இருப்பினும் டோனியுடனான என்னுடைய உறவை விவரிப்பது கடினமாகும். அவருடன் நான் எப்போதும் சுதந்திரமாக பேசி மற்றவர்களுடன் விவாதிக்காததை கூட விவாதிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரிஷப் பண்ட் சொல்வது போல 500 போட்டிகள் விளையாடியவருடன் எப்படி ஒப்பிட முடியும். டோனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய முதல் சில போட்டிகளில் நிறைய கேட்ச் மிஸ், ஸ்டெம்பிங் மிஸ் செய்துள்ளார். ஒரு கேட்ச் மிஸ் செய்யும் போது நெஹ்ரா கூட டோனியை திட்டியுள்ளார். அந்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதேபோல கேஎல் ராகுல் கீப்பிங் செய்யும் போது கூட கேட்ச் மிஸ் செய்தால் உடனே ரசிகர்கள் டோனி டோனி என கூச்சளிடுவது நடந்திருக்கிறது. புதிதாக அணிக்கு வரும் ஒவ்வொருவரும் பதட்டத்துடன் தான் விளையாடுவார்கள். இதுபோன்ற பிரச்சனை இருப்பது வழக்கம்தான். ஆனால் இதை வைத்து கொண்டு மற்றவருடன் ஒப்பிடுவது சரியாகாது.

    Next Story
    ×