search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதி"

    • கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 68). இவர் ஈரோடு சத்தியமங்கலம் ரோடு கணபதிபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக கிரே நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் ரோகினி (25) என்பவர் அமர்ந்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வித மாக அங்கம்மாள் மீது மோதியது. இதில் அங்க ம்மாள் மற்றும் ரோகினி ஆகியோர் படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். ரோகினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது வாலிபர்வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 27). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் இரும்புகளை வாங்கி இரும்பு உருக்கு ஆலைக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். இவர் கள்ளியம்புதூர் பகுதியில் தனியாக தங்கி விஜயமங்கலத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பல்லகவுண்ட ம்பாளையம் சென்று விட்டு இரவு கள்ளியம்புதூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளியம்புதூர் அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினர். இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சென்னிமலை நாச்சி முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 65). இவர் சென்னிமலை பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெருந்துறை சென்னிமலை ரோடு வேளாளர் தம்பிரான் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • கூலித்தொழிலாளியை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்து.
    • ஓலப்பாளையம் அருகே வாகனம் மோதி பெண் பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஓலப்பாளையம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் எல்லைமேடு பகுதிக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்து திரும்ப ஓலப்பாளையம் வீட்டிற்கு மோகனூர்- பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. மாரியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் சூரமங்கலம் மாமாங்கம் ஐடி பார்க் அருகில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதி பாலியானார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் மாமாங்கம் ஐடி பார்க் அருகில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார்சைக்கிள் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் முதியவர் பலத்த அடிபட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் மற்றும் போலீசார் சேர்ந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7-ந்தேதி இரவு 9 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த முதியவர் பெயர் மற்றும் முகவரி குறித்து எதுவும் தெரியவில்லை. அவர் கிரே கலர் கட்டம் போட்ட சட்டை, ஊதா கலர் வேட்டி அணிந்திருந்தார். இவரை பற்றி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது.
    • இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    முத்தூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் சேலத்தை சேர்ந்த ஆர்.சந்தோஷ் (வயது 24), பி.சந்தோஷ் (24) என்ற வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆர்.சந்தோஷ் இறந்து விட்டதாக கூறினர். மற்றொரு வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையத்தில் ஆம்னி கார்கள் மோதி 2 ேபர் படுகாயம் அடைந்தனர்.

    குமாரபாளையம்:

    திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 48). மாவு மில் ெதாழில் நடத்தி வருகிறார். இவரது நண்பர் சதீஷ்குமாரின் தாயார் பார்வதிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரை, சுந்தரம் தனது ஆம்னி காரில் கோவைக்கு அழைத்து ெசன்றார்.

    பின்னர் சிகிச்சை முடிந்து ஆம்னி காரில் வீடு திரும்பினார்.சுந்தரம் கார் ஓட்ட, அருகில் உறவினர் இளங்கோ அமர்ந்திருந்தார். சேலம் -கோவை புறவழிச்சாலை கல்லூரி அருகே வந்த போது, பல்லக்காபாளையம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மற்றொரு ஆம்னி கார் சுந்தரம் ஓட்டி வந்த கார் மீது ேமாதியது.

    இதில் சுந்தரம், பார்வதி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து சுந்தரம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியிலும், பார்வதி கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான ஆம்னி கார் டிரைவர் எடப்பாடியை சேர்ந்த மாதேஸ் ( 36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×