பஸ்-மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது.இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ்-மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
Published on

சிவகிரி:

முத்தூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் சேலத்தை சேர்ந்த ஆர்.சந்தோஷ் (வயது 24), பி.சந்தோஷ் (24) என்ற வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆர்.சந்தோஷ் இறந்து விட்டதாக கூறினர். மற்றொரு வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com