மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் பலி

சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் பலி
Published on

பெருந்துறை:

சென்னிமலை நாச்சி முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 65). இவர் சென்னிமலை பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பெருந்துறை சென்னிமலை ரோடு வேளாளர் தம்பிரான் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com