search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கள்"

    • சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை முன்னே சென்று கொண்டிருந்த கார் ஓன்று திடீரென பிரேக் போட்டதால், அதன் பின்னே வந்த மற்றொரு கார், மற்றும் சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

    இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
    • மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    அதில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பும் ஒன்று. இந்தப் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் கார் எப்படி ஏற்பட்டு பார்க்கிங் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பு நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட பணிகள் முடிவடைந்துள்ளது. 6 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.

    விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கை திறந்து வைப்பார்.

    இதில் 56 கார்கள் நிறுத்தி வைக்கலாம்.

    இது தவிர வளாகத்தில் 10 கார்களை நிறுத்தி வைக்கலாம். கார்களை நிறுத்தி வைப்பதற்கு மிக குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 102 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

    மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகளும் விரைவில் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி , செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சோதனையில், 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது.
    • கார்களை ஓட்டி வந்த இசக்கிவேல், சவரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்தவழியாக வந்த 2 கார்களை மறித்து சோதனை செய்தனர். அதில் 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்களை ஓட்டி வந்த தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த இசக்கிவேல் (வயது47), மாப்பிள்ளையூரணி சவரிமுத்து ஆகியோரை கைது செய்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகளையும், கார்களையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    குமாரபாளையத்தில் ஆம்னி கார்கள் மோதி 2 ேபர் படுகாயம் அடைந்தனர்.

    குமாரபாளையம்:

    திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 48). மாவு மில் ெதாழில் நடத்தி வருகிறார். இவரது நண்பர் சதீஷ்குமாரின் தாயார் பார்வதிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரை, சுந்தரம் தனது ஆம்னி காரில் கோவைக்கு அழைத்து ெசன்றார்.

    பின்னர் சிகிச்சை முடிந்து ஆம்னி காரில் வீடு திரும்பினார்.சுந்தரம் கார் ஓட்ட, அருகில் உறவினர் இளங்கோ அமர்ந்திருந்தார். சேலம் -கோவை புறவழிச்சாலை கல்லூரி அருகே வந்த போது, பல்லக்காபாளையம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மற்றொரு ஆம்னி கார் சுந்தரம் ஓட்டி வந்த கார் மீது ேமாதியது.

    இதில் சுந்தரம், பார்வதி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து சுந்தரம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியிலும், பார்வதி கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான ஆம்னி கார் டிரைவர் எடப்பாடியை சேர்ந்த மாதேஸ் ( 36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×